பயப்படாதிருங்கள் BE NOT AFRAID 61-0224 வெள்ளிக்கிழமை மாலை, பிப்ரவரி 24, 1961 Fairgrounds Auditorium, துலேர், கலிபோர்னியா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் பயப்படாதிருங்கள் (61-0224) நாம் கர்த்தருக்கு முன்பாகத் தலைவணங்கி ஜெபம் ஏறெடுக்கும்படி சற்று நேரம் நின்றுகொண்டிருப்போம். நாம் தலை வணங்கியிருக்கும் இந்த வேளையில், தேவ னுக்கு முன்பாக ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று இங்குள்ளவர்களில் எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? உங்கள் கரத்தை மட்டும் உயர்த்துங்கள், உங்கள் விண்ணப்பத்தை உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஜெபம் செய்வோம். 2 கிருபையும் பரிசுத்தமுமுள்ள பிதாவாகிய தேவனே, எங்கள் இருதயங்களில் நன்றியோடு உமது சமுகத்திற்குத் தாழ்மையாய் வருகிறோம், ஏனெனில், நீர் எங்கள் மீது எவ்வளவோ அன்புகூர்ந்து, உம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளினீர். 3 தேவனே, இந்த மாபெரும் வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள், அதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆண்டவரே, மனிதகுலத்திற்கு அளிக்கப்பட்ட சொல்லமுடியாததும் மகிமை யால் நிறைந்ததுமான இந்த சந்தோஷத்தை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்கள் இருதயங்கள் எரிகின்றன. 4 பிதாவே, இன்றிரவு வியாதியுடனும் தேவையுடனும் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு இங்கே கிடக்கிறார்கள், தேவனே, இது ஒரு வியாதி நிறைந்த உலகம், ஆனால் ஆண்டவரே, நீர் எங்களுக்காக ஒரு வழியை ஏற்படுத்தினீர், ஏனெனில், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்... அவருடைய தழும்பு களால் நாம் குணமாகிறோம்" என்று எழுதப்பட்டிருக்கிறதே. 5 இப்போது, பிதாவே, நாங்கள் இங்கு வெறும் உம்முடைய ஊழியர்களாகவே இருக்கிறோம், மக்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுக்க முயற்சிக்கிறோம், அவர்கள் அதைக் காணவும், புரிந்துகொள்ளவும் வேண்டும்; விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இன்றிரவு சபையாருக்கு இதை எவ்வளவாக உண்மையாக்குவீராக என்றால், இந்த ஆராதனை முடியும் போது நம் மத்தியில் ஒரு பெலவீனன்கூட இருக்கக்கூடாது, ஒரு பாவியும் இருக்கக்கூடாது, அனைவரும் உள்ளும் புறமும் இரட்சிக்கப்பட வேண்டும், படுக்கைகள் காலியாக வேண்டும், சக்கர நாற்காலிகள் காலியாக வேண்டும், இருதய நோய், புற்றுநோயோடு மரணவாயிலில் இருக்கும் ஒவ்வொருவரும் குணமடைய வேண்டும். 6 இன்றிரவு உம்முடைய பிரசன்னத்தின் காரணமாக, இந்த நகரத்தின் மீதும், பள்ளத்தாக்கைச் சுற்றிலும் ஒரு யூபிலி நேரம் உண்டாவதாக; ஆண்டவரே, இந்தக் கடற்கரை முழுவதிலும் அசைவாடும் ஒரு பழங்கால எழுப்புதலைத் துவங்குவீராக. எங்கள் இருதயங்களையும் எங்கள் விசுவாசத்தையும் உம்மில் நிலைநிறுத்துவீராக, இதை இயேசுவின் நாமத்தில், அவருடைய நாமத்தினிமித்தமே கேட்கிறோம். ஆமென். 7 நீங்கள் அமரலாம். இன்றிரவு கண்காட்சி மைதானத்தில் உள்ள இந்த அரங்கத்தில் இருப்பது எனக்குக் கிடைத்த ஒரு மாபெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நேற்றிரவு ஆயுதக் கிடங்கில் எச்சரிக்கை விடப்பட்டதால் நாம் எவ்வளவு அவசரமாக முடிக்க வேண்டிய தாயிற்று என்பதற்காக நான் வருந்துகிறேன், நம்மால் ஒரு அடித்தளத்தைக்கூட அமைக்க முடியவில்லை. 8 நமது பெரிய எதிரியான பிசாசை நீங்கள் அறிவீர்கள், அவன் நம்மை ஒரு வழியில் பிடிக்க முடியவில்லை என்றால், அவன் வேறொரு வழியில் முயற்சி செய்வான். மக்கள் அனைவரையும் நாம் ஒரே சிந்தைக்குள் கொண்டுவர முடிந்தால், அவனால் அதை ஒன்றும் செய்ய முடியாது, எனவே நாம் அமைதியாக இருந்து, கவனித்து, பார்த்து, விசுவாசித்து, அதன்பிறகு கர்த்தருடைய கிரியைகளைக் காண முடியாதபடிக்கு, கூட்டத்தை வேறு ஏதாவது வழியில் குழப்புவதற்கு அவன் ஏதேனும் செய்வான். 9 இன்றிரவு இந்த அரங்கத்திற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நூற்றுக் கணக்கான மக்கள் நிற்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது, ஆனால், மக்கள் அமருவதற்கு இடமளிக்க, இந்த அமைப்பு தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் செய்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 10 இப்போது, இது இப்படியே தொடர்ந்தால், இதை மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்பது தகுதியானது என்று நான் நம்புகிறேன். நண்பர்களே, மீண்டும் முயற்சி செய்யலாம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஏன், ஒருவேளை நம்மால் முடியும், இருபதாயிரம், முப்பதாயிரம் மக்கள் அமரக்கூடிய ஒரு கூடாரத்தைப் பெற்று இங்கே எங்காவது அமைக்கலாம், அதை மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு அப்படியே விட்டுவிடலாம், நாம் ஒருவரையொருவர் உண்மையிலேயே நன்கு அறிந்து பழகலாம்... கர்த்தருக்குச் சித்தமானால், அதுதான் நமக்குத் தேவை, எனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி, நான் அதை மதிக்கிறேன், அது கர்த்தருடைய சித்தமாக இருந்தால் அப்படியே செய்வோம். 11 நான் எப்போதுமே அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றவே விரும்புகிறேன், அவர் எங்கே போகிறாரோ, எங்கே வழிநடத்துகிறாரோ அங்கே, அப்போது நாம் சரியான வழியில் இருக்கிறோம் என்று அறிந்துகொள்வோம். நான் ஏன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எங்காவது ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டால், உங்கள் வழிநடத்துதலைப் பற்றி நீங்கள் உறுதியாக இல்லாவிட்டால், சாத்தான் உங்களைப் பார்த்து, "இதோ, பார்" என்று சொல்ல முடியும். 12 ஆனால் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் மீண்டும் அவனை நேராகச் சந்தித்து, "நான் கர்த்தருடைய நாமத்தில் வருகிறேன்," என்று சொல்லி, "எனவே பின்வாங்கிப் போ! அவ்வளவுதான்" என்று சொல்லலாம். புரிகிறதா? கர்த்தர் உங்களை அனுப்பியிருந்தால் அவன் அதைச் செய்துதான் ஆகவேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஊழியக் களங்களுக்கு நான் செல்லும் போது, அங்கே நாம் போராட வேண்டிய சூனியக்காரர்களும் இதுபோன்ற காரியங்களும் ஏராளமாக இருக்கின்றன, நீங்கள் அதைச் செய்யும்படி வழிநடத்தப்படுகிறீர்கள் என்றும், அதைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும் உங்களுக்குத் தெரியும்போதெல்லாம், அங்குள்ள எதிர்ப்புகள் எல்லாம் ஒன்றுமே இல்லை, நீங்கள் உங்கள் நிலையில் உறுதியாக நிற்கிறீர்கள், அங்கே உறுதியாக நின்று ஜெயம் கிடைக்கும் வரை முன்னேறிச் செல்கிறீர்கள். 13 ஆகவே, இன்றிரவு நான் உங்களை அதிக நேரம் காக்கவைக்க மாட்டேன் என்று நம்புகிறேன், நான்... ஒரு சிறிய வேத வாசிப்புக்குப்பின், பிறகு நான்... நாம் ஜெப வரிசையைக் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படப் போகிறோம், ஏனென்றால் அவர்களை மேலே கொண்டுவர இரண்டு கதவுகளும் முட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். இந்த ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அனைவரும், அவற்றை வைத்துக்கொள்ளுங்கள். சூழ்நிலைகள் இப்படி இருக்கும்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன், சில சமயங்களில்... 14 வெளியே வந்தபோது ஒரு இளைஞன் என்னிடம் வந்து, "சகோதரர் பிரன்ஹாம், முந்தைய இடத்திலிருந்ததைப் போலவே இங்கும் மக்கள் நிரம்பி வழிகிறார்கள்," என்று சொன்னான். "எங்களுக்கு இடமில்லை," என்று அவன் சொன்னான். 15 நான் சொன்னேன், "சரி, என்னால் முடிந்த ஒரே வழி..." உண்மையாகவே, நான் இங்கு வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்திற்காகத்தான், முதலாவது தேவனுடைய மகிமைக்காக; இரண்டாவது ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக; மூன்றாவது வியாதிகஸ்தர்கள் குணமடைவதைக் காண முயற்சி செய்வதற்காக. ஆக, அதுதான்... மேலும், மருத்துவரின் நோயாளிகளை எடுத்துக்கொள்ள நான் ஒருபோதும் வரவில்லை, இல்லை, மருத்துவரின் நோயாளிகளுக்காகவும், போதகரின் சபை மக்களுக்காகவும், என் நண்பர்க ளுக்காகவும் ஜெபிக்கவே நான் வருகிறேன், பாருங்கள், அவர்களுக்காக வெறுமனே ஜெபிக்கிறேன். 16 இப்போது, ஞாயிற்றுக்கிழமை ஒரு வேளை நாம் இங்கே இருப்போம் என்று நினைத்தேன், அது ஒரு மதிய ஆராதனை, அதனால் கொஞ்சம் வெயிலாக இருக்கும், மக்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், ஒருவேளை வெளியே நிற்கக்கூடும். ஆனால் இன்றிரவும் நாளையும் இரவு, தேவனுடைய கிருபையினால் தேவனுடைய வார்த்தையின் மூலமாக, தேவனுடைய பிரசன்னத்தை உணரும் நிலையை நம்மால் கொண்டுவர முடிந்தால், பாருங்கள், பிறகு நாம் உண்மையான ஜெப வரிசையைத் துவங்கும் போது, பாதிக்கப் பட்டவர்களையும், ஜெபிக்கப்பட வேண்டி யவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரிசைப்படுத்தும் போது, அப்போது நாம் பலனைப் பெறுவோம் என்று நம்புகிறேன். புரிகிறதா? 17 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு கட்டமைப்பை உருவாக்குவது போன்றது, ஒரு போதகர் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுற்றி தனது வேதப்பகுதியை எடுத்துக்கொண்டு, பிறகு அதை விரித்து வைத்து, தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதியவைப்பதைப் போன்றது; ஒரு தச்சர் தனது பலகையைப் பொருத்தி, பிறகு அதில் ஆணி அடித்து இணைப்பதைப் போன்றது. அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்க விரும்புகிறோம், ஏனென்றால் மக்களுக்கு உதவ நாம் ஏதேனும் செய்ய முயற்சிக்காவிட்டால், நாம் இங்கு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, அதற்காகவே நாம் இங்கு இருக்கிறோம். 18 நான்... ஒருவேளை குணமாகுதல்... இதோ இந்த ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் இந்த இளைஞன், அந்தச் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த அருமையான சின்னஞ் சிறு குழந்தை, இங்கே ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் இந்தப் பரிதாபகரமான தாய், அங்கே நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி, ஏதாவது ஒரு வியாதி, அங்கே இருதய நோயால் மரித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு மனிதர், புற்றுநோயால் அரிக்கப்பட்ட ஏதோ ஒரு தாய், அவர்களுக்கு உதவ என்னால் ஏதாவது செய்ய முடியுமானால், என்னால் ஏதேனும் செய்ய முடிந்து அதை நான் செய்யாவிட்டால், நான் ஒரு போதகராக இருப்பதற்குத் தகுதியற்றவன் அல்லவா? நான் அப்படி இருந்தால், நண்பர்களே, எனக்கு இங்கே இடமே இல்லை. என்னால் முடியுமானால்... நான் இதைச் சொல்கிறேன், இது வீம்புக்காகச் சொல்வது போல் தோன்றலாம், ஆனால் ஒருவரை குணப்படுத்த, ஒரு கால் டாலர் நாணயத்தை எடுத்து எனது மூக்கால் இந்த நகரம் முழுவதும் தள்ளிச் செல்ல முடியுமானால், நான் அதைச் செய்வேன், பாருங்கள், நான் அதைச் செய்வேன். வியாதியோடு இருப்பதன் வலி எனக்குத் தெரியும், நானே வியாதிப்பட்டிருக்கிறேன். 19 நான் இனி குணமடையவே மாட்டேன், உயிர்வாழவே மாட்டேன் என்று மருத்துவர் சொன்ன ஒரு நிலையில், நான் உயிர்வாழ்வதற்கு ஏதோ ஒன்றைக் கண்டுகொண்டேன், அதைப் பற்றி மற்ற அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன், புரிகிறதா. எனவே இப்போது, நமக்கிருக்கும் இந்தச் சிறிய, குறுகிய நேரத்தில், மிகச் சிறந்த முடிவுகளை நாம் பெறக்கூடிய வழியில் பரிசுத்த ஆவியானவர் நடத்தும் வழிநடத்துதலைப் பின்பற்றலாம். 20 இப்போது, நாம் இங்கே செய்வதை விட கூட்டத்தில் தங்கியிருப்பதற்கு உண்மையில் அதிக நேரம் தேவைப்படுகிறது, ஏனென்றால் பல நேரங்களில் மக்கள் அவசரமாக வருகிறார்கள், புரிந்துகொள்வதில்லை, பிறகு அவர்கள் வெளியே செல்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் முதல் சிறிய அசாதாரண உணர்வில், நீங்கள் மக்களுக்கு எவ்வளவுதான் சொல்ல முயற்சித்தாலும், அவர்கள் இன்னும் தங்களு டைய உணர்ச்சிகளையே சார்ந்திருக்கிறார்கள், தாங்கள் செயல்படும் ஐம்புலன்களில் ஒன்றையே நம்பி, "நான் நன்றாக உணர்ந்தால், நான் அதை விசுவாசிக்கிறேன்" என்கிறார்கள். புரிகிறதா? ஆனால் அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, இதன் உண்மைத்தன்மை என்ன என்பதையும், தேவனோடு எப்படிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் மக்கள் பார்க்கும்படிக்கு, நாம் அவர்களோடு கூட்டத்தில் போதுமான நேரம் செலவிட முடிந்தால், அப்படிச் செய்யும்போது, நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். 21 ஆகவே இப்போது, நீங்கள் என்னுடன் பொறுமையோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன், நான் உங்களோடு இங்கே இருக்கும்போது, தேவனுடைய ராஜ்யத்திற் காகவும உங்களுகாகவும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பதற்காக, எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரமும் என் அறையில் ஜெபித்து, தேவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 22 இப்போது, நாளை இரவு, நினைவில் கொள்ளுங்கள், மேலும், உங்கள் ஜெப அட்டைகள் அழைக்கப்படாவிட்டால், அவற்றை வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் ஜெப அட்டைகள் கொடுக்கும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், ஆகவே அதைச் செய்ய நாங்கள் தார்மீக ரீதியாகக் கடமைப்பட்டிருக்கிறோம், தேவனுடைய கிருபையினால் அதைச் செய்வோம், முடிந்தால் ஒவ்வொருவருக்காகவும் செய்வோம், பாருங்கள், அதுதான் நோக்கம். 23 இப்போது, நாம் இங்கு பல வாரங்கள், ஒருவேளை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தால், இத்தனை பேரை, இத்தனை பேரை என்று நாம் அழைக்கத் தொடங்கி, இறுதியாக அதை முழுமையாக முடித்திருப்போம், ஆனால்... நாங்கள் அதிகமான ஜெப அட்டைகளை வழங்காமல் இருக்க முயற்சிக்கப் போகிறோம், ஆனால் இரவு முழுவதும் எத்தனை பேரை அழைக்க முடியுமோ அத்தனை பேரை அழைப்பதற்குப் போதுமான நேரம் நமக்கு இருக்கிறது என்று நினைத்து எங்களால் முடிந்த அளவு கொடுக்கப் போகிறோம். 24 இப்போது, நான் நேற்றிரவு ஒன்றைக் கூற நினைத்தேன், இது வேறொரு நகரத்தில் விசித்திரமாக ஒலிக்கலாம், நான் என் கோட்டுகளை சலவை செய்பவரிடம் இஸ்திரி செய்வதற்காகக் கொடுத்தேன், நான் இப்போது சுமார் பதினைந்து ஆண்டுகளாக சூட்கேஸு டனேயே வாழ்கிறேன், கோட்டுகள் கசங்கி விடும், நான் இஸ்திரி செய்வதற்காக எனது இரண்டு கோட்டுகளைக் கொடுத்திருந்தேன். அந்த இஸ்திரி வேலைக்குப் பணம் செலுத்திய அந்தச் சகோதரிகள் இங்கு இருந்தால், சகோதரிகளே உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 25 நான் உள்ளே சென்றேன், அவர்கள் என்னைப் பணம் செலுத்த விடவில்லை, அங்கே இருந்த இரண்டு சகோதரிகள் அதற்குப் பணம் செலுத்திவிட்டார்கள் என்று சொன்னார்கள்; அந்தப் பெண்மணி, அவர்கள் வந்து என் கோட்டைத் தடவிப் பார்த்தார்கள் என்று சொன்னார். இப்போது, அது மிகவும் இனிமையானது, நான் அதைப் பாராட்டுகிறேன், அது மிகவும் அருமையானது. ஆனால், நிச்சயமாக, அது வெறும் கோட்டுத்துணிதான், ஆனால் நீங்கள் ஏதேனும் விரும்பினால், தேவன் உங்கள் விசுவாசத்தை கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன், பாருங்கள், அப்படிச் செய்வதன் மூலம், பாருங்கள், ஆனால் அது ஒரு கோட்டு மட்டுமே. ஆக, உங்களிடம் உண்மையாக இருக்க நான் குறைந்தபட்சம் உங்களுக்கு உண்மையையாவது சொல்வேன் என்கிற உங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கை யையும் நான் பாராட்டுகிறேன், உங்களுக்கு மிகவும் நன்றி. நான் அந்தப் பெண்மணியிடம், "நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "இல்லை, இல்லை, அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்" என்று சொன்னார். எனவே நீங்கள் இங்கே இருந்தால், "உங்களுக்கு நன்றி." நாம் இப்போதுதான் கடந்துவந்த நகரத்தில் இருந்த ஸ்டார் கிளீனர்ஸில்தான் அது நடந்தது. 26 இப்போது, இன்றிரவு வேதாகமத்தில் இருந்து ஒரு சாட்சிக் கூட்டத்தின் தலைப்பைப் பற்றி நான் சிந்தித்தேன், பரிசுத்த மத்தேயு 14-ம் அதிகாரம், 27-ம் வசனத்தை வேதப்பகுதியாக வாசிக்க விரும்புகிறேன். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 27 இப்போது, இந்தச் சாட்சிக் கூட்டத்திற்காக பயப்படாதிருங்கள் என்ற தலைப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். 28 உலகில் உள்ள முழு மனிதகுலத்தையும் கட்டுப்படுத்தும் இரண்டு காரியங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பயம், மற்றொன்று விசுவாசம். இப்போது, ஒவ்வொரு தேசத்தையும், ஒவ்வொரு சபைப் பிரிவையும், ஒவ்வொரு தனிநபரையும் கட்டுப்படுத்துவது பயம் அல்லது விசுவாசமே, உங்களைக் கட்டுப்படுத்துவதும் பயம் அல்லது விசுவாசம்தான். 29 இப்போது, அது சூரியன் மறையும் நேரமாக இருந்திருக்க வேண்டும், சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது, சீஷர்கள் ஏறிய தால் அந்தச் சிறிய படகு கரையில் சற்று அழுந்தியிருந்தது. மீனவனாகிய சீமோன் என்று நாம் நம்புகிற அந்தப் பெரிய, பலசாலி, படகுகளையும் கடந்து செல்ல வேண்டிய ஏரியையும் நன்கு அறிந்தவன், மீன்பிடிப்பதே அவனது தொழில், இப்போது, அவன் தனது பெரிய, வலிமையான கரங்களால் பின் பக்கமாகச் சென்று கரையில் இருந்த அந்தச் சிறிய படகைத் தள்ளிவிட்டு, அதில் ஏறி, தன் சகோதரனான அந்திரேயாவின் பக்கத்தில் அமர்ந்து, துடுப்புகளைக் கையில் எடுத்தான். 30 அந்த நாட்களில் படகுகள் துடுப்புகளால் செலுத்தப்பட்டன அல்லது பாய்மரங்களால் காற்றினால் செலுத்தப்பட்டன; சில சமயங்களில் துடுப்புப் போடும்போது பலத்த காற்று வீசினால், அவர்கள் பாய்மரத்தையும் விரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். 31 அங்கே... அங்கே இதைப் போல ஒரு கூட்டம் இருந்திருக்க வேண்டும், கரைகளில் கைகளை அசைத்துக்கொண்டு, ஓ, இதுபோல நெரிசலாக இருந்திருக்கும் என்று சொல்கிறேன், ஆனால் ஒருவேளை இதைப் போல பல மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம். ஐயாயிரம் பேர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் கரையில் நின்றுகொண்டு கைகளை அசைத்து, கிறிஸ்துவின் இந்த ஊழியர்களுக்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தார்கள். 32 நான் வேதவசனத்தை விட்டு விலகிச் செல்லவில்லை என்பதை நீங்கள் காணும்படி, இதை நாம் ஒரு கதையின் வடிவில் ஆக்கலாம் என்று நான் நம்புகிறேன். நாம் வேத வசனங்களைத்தான் விசுவாசிக்கிறோம், தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தி ருந்தால், தேவன் தமது வாக்குத்தத்தத்தில் நிலைத்திருக்க வேண்டும்; வாக்குத்தத்தத்தைக் கைவிட்டுவிட்டு அவர் தேவனாகவே தொடர முடியாது. 33 அவர்கள் ஒருவேளை சில நூறு கெஜங்கள் துடுப்புப் போட்டுச் சென்றிருப் பார்கள், அவர்கள் இரு கைகளால் பிடிக்கும் துடுப்பால் ஓரிரு முறை வலித்திருப்பார்கள். அவர்கள் அப்போது செய்ய வேண்டியிருந்தபடி, ஒரு குழுவாகச் செயல்பட்டு, அந்தச் சிறிய படகை முன்னிறுத்தி... சூரிய அஸ்தமனத்தில் கடலில் அமைதி நிலவியபோது, அமைதியான கலிலேயாக் கடலில் தண்ணீரைப் பிளந்து கொண்டு அவர்கள் பயணம் செய்தார்கள். 34 கரையில் மக்கள் கைகளை அசைத்துக்கொண்டு, அவர்களை மீண்டும் திரும்பி வந்து தங்களைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர், கடைசியாக இருந்த வரும் மறைந்துபோகும் போது, அந்தக் கடைசி விடைகொடுத்தலின் போது, இரவோடு இரவாக அந்தக் கடலைக் கடந்து மறுபுறம் செல்வதற்குத் தாங்கள் ஒரு பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருந்த சீஷர்கள் அப்போது மிகவும் பலமாகத் துடுப்புப் போட்டிருக்க வேண்டும். 35 இருட்டத் துவங்கிய பிறகு, இனி மக்களைப் பார்க்க முடியாத நிலை வந்ததும், இளைஞனான யோவான்தான் துடுப்புப் போடுவதை நிறுத்தியிருக்க வேண்டும், மற்ற கடினமான மாலுமிகளைப் போல் துடுப்புப் போடுவதில் அவனுக்கு அவ்வளவு பழக்கம் இல்லாததால், அவன் நிறுத்திவிட்டு, தன் முகத்தில் விழுந்த தலைமுடியைப் பின்னால் ஒதுக்கிவிட்டு, இருட்டுவதற்குள் எவ்வளவு தூரம் கடக்க முடியுமோ அவ்வளவு தூரம் கடக்க மிகவும் கடினமாகத் துடுப்புப் போட்டதால் ஏற்பட்ட மூச்சுவாங்குதலைக் குறைப்பதற்காகச் சற்று மூச்சுவிட சிறிது நேரம் எடுத்திருக்கலாம். 36 அவர்கள் ஒரு சாட்சிக் கூட்டத்தைத் துவங்கியிருப்பார்கள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன், இளைஞனான யோவான் இப்படிச் சொல்லியிருக்கலாம்: "என் சகோதரர்களே, இன்றைய நாளுக்குப் பிறகு, நாம் ஒரு வஞ்சகனைப் பின்பற்றுகிறோம் என்று நம்மில் யாராவது நினைப்பார்கள் என்று நான் நம்பவில்லை. என் சிந்தனையின்படி, நாம் அவரை என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ, அவர் அப்படியே இருக்கிறார் என்பதை இன்று நிரூபித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். 37 "சொல்லுங்கள் சகோதரர்களே, இன்று தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்காக அவரைச் சுற்றிக் கூடிவந்த அந்தப் பசியுள்ள கூட்டத்தை நீங்கள் கவனித்தீர்களா...? அவர்கள் எப்படி அவரைச் சுற்றிவர முண்டியடித்து தள்ளிக்கொண்டார்கள் என்பதைப் பார்க்க, அவர்களில் சிலர் நாள் முழுவதும் சாப்பிடவில்லை, பாலூட்டும் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்திருந்த அந்தத் தாய்மார்கள் எவ்வளவு சோர்வாகக் காணப்பட்டார்கள், வியாதிகஸ்தர்கள் எப்படி அவரைச் சுற்றி நெருக்கினார்கள்! 38 "ஆனால் அவர் அந்த மீன்களைக் கேட்டபோது, நான் அந்தச் சிறுவனைக் கண்டேன், அவன் அந்தச் சிறிய, ஐந்து சிறிய பிஸ்கட்டுகளை அல்லது இரண்டு சிறிய மீன் துண்டுகளை அங்கே கொண்டுவந்தான், அவர் அவர்கள் அனைவரையும் ஐம்பது ஐம்பது பேராகப் புல் நிறைந்த மலைப்பகுதியில் அமரச் செய்தார், ஒருவேளை பள்ளியைப் புறக் கணித்துவிட்டு ஓடிவந்த ஏதோ ஒரு சிறுவன் கூட்டத்தின் சத்தத்தைக் கேட்டு, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக மலையின் மீது ஏறி வந்தபோது, இந்த மாபெரும் பேச்சாளர் என்ன சொல்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்க விரும்பி, அது மிகவும் ஈர்ப்பாக இருந்ததால் தனது மதிய உணவையே மறந்துபோயிருந்த அவனுடைய அந்த ஒரு சிறிய மதிய உணவு மட்டுமே அவரிடம் இருந்தபோது, அவர் என்ன செய்யப்போகிறார் என்று நானே ஆச்சரியப்பட்டேன். 39 "அவர் அந்த அப்பத்தை, அந்தச் சிறிய பிஸ்கட் துண்டுகளை எடுத்து, அவற்றை உயர்த்தி ஆசீர்வதித்ததை நான் கவனித்தபோது, அவர் அந்த அப்பத்தைப் பிட்டு நம்முடைய கைகளில் கொடுத்ததைக் கண்டபோது, மறுபடியும் அதே பிஸ்கட்டிலிருந்து தொட்டு இன்னொரு பிஸ்கட் துண்டை எடுத்தபோது, அவர் மறுபடியும் கையை நீட்டியபோது அங்கே ஏற்கெனவே உருவான, சுடப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, உண்பதற்குத் தயாராக இருந்த மற்றொரு பிஸ்கட் துண்டு இருந்ததே, சகோதரர்களே, அது என்ன தெரியுமா?" அவன் இப்படிச் சொல்லியிருக்கலாம்: "என் தாய் எனக்குச் சொல்ல நான் கேட்ட வேதாகமக் கதைகளை அது எனக்கு நினைவூட்டியது. 40 "நான் ஒரு சிறிய யூதச் சிறுவனாக இருந்தபோது, எனது அன்பான, சின்னத் தாய் எனக்கு எப்படிச் சொல்வாள் என்பது எனக்கு நினைவிருக்கிறது, 'கண்ணே, நமது மக்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, ஒரு காலத்தில் நாம் அடிமைகளாக இருந்தோம், அந்த அடிமைத்தனத்தின் பாடுகளிலிருந்து நாம் விடுவிக்கப்படுவதற்கு உதவும்படி தேவன் நமக்காக அனுப்பிய மோசே என்னும் ஒரு பெரிய தீர்க்கதரிசி நம்மிடையே எழும்பிய போது, நிச்சயமாக மோசேயால் அப்பத்தை உருவாக்க முடியாது, ஆனால் வனாந்தரத்திலே இருபத்தைந்து லட்சம் மக்கள் இருந்தபோது, அங்கே கோதுமையோ அல்லது அப்பம் செய்வதற்கு வேறெதுவுமோ இல்லாதபோது, யெகோவா நமக்காக வானத்திலிருந்து அப்பத்தை மழையாகப் பொழியச் செய்தார்.'" 41 "நான் ஆச்சரியப்பட்டு, 'அம்மா, யெகோவாவுக்கு அங்கே பரலோகத்தில் பெரிய தேவதூதர்கள் கூட்டமும், அவர் தம்முடைய அப்பத்தை சுடுவதற்கு பெரிய அடுப்புகளும் இருக்கிறதா? இந்த அப்பத்தை அவர் எங்கிருந்து பெற்றார், அம்மா? அல்லது ஒவ்வொரு இரவும் அவர்கள் அதைச் சுடும்போது, அவருடைய அடுப்புகளிலிருந்து வரும் நெருப்பை நாம் வானத்தில் அண்ணாந்து பார்க்க முடியுமா?' என்று கேட்பதுண்டு. 42 "அதற்கு அம்மா ஒருவேளை இப்படி சொல்லியிருப்பார்கள்: 'இல்லை மகனே, இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நீ மிகவும் சிறியவன், யெகோவாவுக்கு அடுப்புகள் இருக்க வேண்டிய அவசியமில்லை, யெகோவா ஒரு சிருஷ்டிகர், அவர் அப்பத்தை சிருஷ்டிக்கிறார், அது பூமிக்கு கீழே விழுகிறது.'" 43 இளம் யோவான், படகில் எழுந்து நின்று சகோதரர்களுக்கு சாட்சி சொல்லும்போது, இயேசுவின் மேலுள்ள தனது அதியுன்னத விசுவாசத்தை அறிக்கையிட்டு, "அவருக்கு யெகோவாவுடன் ஏதோவொரு தொடர்பு இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் யெகோவாவைப் போலவே அவரும் அப்பத்தை சிருஷ்டித்தார். ஆகையால், என்னைப் பொறுத்தவரை அவரே மெய்யான மேசியா, ஏனென்றால் அவர் தேவனுடைய குமாரன், அவர்-அவரால் சிருஷ்டிக்க முடியும், அப்பத்தை உருவாக்க முடியும், யெகோவா செய்ததைப்போலவே-அப்படியே செய்யவும் முடியும். எனவே, அவர் அந்த அப்பத்தையும் அந்த மீன்களையும் பிட்டதை நான் கண்டபோது, அது வெறும் பச்சை மீன் மட்டுமல்ல, அது சமைக்கப்பட்ட மீன், சாப்பிடத் தயாராக இருந்தது, அது எனக்கு அனைத்தையும் உறுதிப்படுத்தியது," என்றார். 44 இன்றிரவு என் சொற்பொழிவைக் கேட்கும் நேயர்களிடம் நான் கேட்க விரும்புவது: "அவர் சமைக்கப்பட்ட மீனையும்-சமைக்கப்பட்ட அப்பத்தையும் வைத்து, ஐந்து ரொட்டிகளையும் இரண்டு சிறிய மீன்களையும் எடுத்து, ஐயாயிரம் பேருக்கு உணவளித்து, மீதியானதைக் கூடைகளாக எடுத்தபோது, அவர் எந்த வகையான அணுவை அவிழ்த்துவிட்டார்?" அவர் என்ன செய்தார்? இன்று விஞ்ஞானம் அதைப் பற்றி என்ன சொல்லும்? எந்த வகையான அணு, அல்லது மூலக்கூறு, அல்லது அவர்கள் அதை எப்படி அழைக்க விரும்புகிறார்களோ, அது அப்போது அவிழ்த்துவிடப்பட்டது? 45 ஆனால் அவர் அதைச் செய்தார், மேலும் சிறுவன் யோவான் தன் தாய் யெகோவாவைப் பற்றிச் சொன்ன பைபிள் கதைகளில் உள்ள அதே யெகோவா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படும் ஒரு மனிதனில் வெளிப்பட்டார் என்று உறுதியாக நம்பினான், ஏனென்றால் வேறு யாராலும் அதைச் செய்திருக்க முடியாது, அவர் ஒரு சிருஷ்டிகர். 46 சரி, சீமோன், அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியும், அவர் எப்போதும் சாட்சி சொல்லத் தயாராக இருப்பார். உண்மையாகவே தேவனை அறிந்த, கர்த்தராகிய இயேசுவை அறிந்த மற்ற எந்தவொரு சாதாரண கிறிஸ்தவனைப் போலவும் அவரும் மிக விரைவாகத் தனது சாட்சியைச் சொல்லத் தயாராக இருக்கிறார். நேற்றிரவு நாம் அவரைக் குறித்து சில காரியங்களைப் பேசியதால், அவரது சாட்சியை நான் திரும்பவும் நினைவுகூரலாம். 47 அவர் சொன்னார், "ஏன், சகோதரர்களே, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் என் தகப்பனாரோடு சேர்ந்து இந்தக் கடலில் வலைவீசி மீன்பிடித்தபோது... என் அருமையான வயதான பரிசேயத் தகப்பனார் உங்களுக்குத் தெரியும், அவர் சபையில் எப்படிப்பட்ட ஒரு பெரிய மனிதராக இருந்தார், தேவன்மீது எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் காலையில் நாங்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்பு, எங்கள் பிழைப்புக்காக நாங்கள் அதைச் சார்ந்திருந்தபடியால், அவர் என்னை அவரோடு முழங்கால்படியிடச் செய்து, அந்த நாளுக்கான மீன்களுக்காக இங்கே கரையில் ஜெபிக்கச் செய்வார், தேவன் ஒருபோதும் எங்களைக் கைவிட்டதில்லை. 48 "அவருடைய முடி நரைக்க ஆரம்பித்தபோது எனக்கு நினைவிருக்கிறது, விரைவில் நான் என் வயதான அப்பாவை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும் என்று நான் அறிந்திருந்தேன், ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சென்று, படகின் விளிம்பில் அமரவைத்து, 'சீமோன், என் மகனே, இதை நீ நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: இஸ்ரவேலர்கள் அனைவரும் மேசியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், காலம் நெருங்கி வருகையில், ஒவ்வொரு மனிதனும் அவர் வரும் நாளைப் பார்க்க உயிரோடிருப்போம் என்று எப்போதும் நினைத் தார்கள், நானும் அப்படியே நினைத்தேன், ஆனால் இப்போது எனக்கு வயதாகிவிட்டது, நான் அதைப் பார்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் சீமோனே, ஒரு பைபிள் விசுவாசியாக, யெகோவாவை விசுவாசிப் பவனாக, என் மகனே, நான் உனக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்' என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது." 49 ஒரு தகப்பனோ, அல்லது ஒரு தாயோ அப்படிச் செய்வது நல்ல காரியம். இன்று நாம் ஹாட் ராட்ஸ் (hot rods) மற்றும் பிற காரியங்களைக் குறித்துச் செயல்படுவதை விட, கர்த்தருடைய காரியங்களில் நம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதில் அதிக நேரத்தைச் செல விட்டால், நமக்கு இவ்வளவு சிறுவர் குற்றங்கள் இருந்திருக்காது, அது உண்மைதான். 50 சுசன்னா வெஸ்லி பதினேழு பிள்ளைகளின் தாயாக இருந்தார், அவளிடம் எந்த பட்டன்-அழுத்தும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களும், தண்ணீரைப் பெறுவதற்குத் திருகும் குழாய்களும் இல்லை, ஆனாலும் அத்தனை பிள்ளைகளுடன், அந்தப் பதினேழு பிள்ளைகளைச் சுற்றி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் அவளால் ஜெபத்தில் செலவிட முடிந்தது. அந்தச் சிறிய பறவைகளின் கூட்டிலிருந்துதான் உலகத்தையே உலுக்கிய ஒரு யோவானும் ஒரு சார்லஸும் புறப்பட்டு வந்தார்கள். தங்கள் பிள்ளைகளுக்குத் தேவனைப் பற்றிக் கற்பிக்க நேரம் ஒதுக்கும் அதுபோன்ற தாய்மார்கள் நமக்கு அதிகம் தேவை. 51 வெகு காலத்திற்கு முன்பு, நான் ராஜாவுக்காக ஜெபிக்க லண்டனுக்குச் சென்றிருந்தபோது அவளுடைய கல்லறையின் அருகே நின்றேன், அங்கே அவளது கல்லறையின் மீது என் கையை வைத்து, "தேவனே அந்த அருமையான தாய்க்கு இளைப்பாறுதல் தாரும், நீர் அவளுக்கு அதை அளித்திருக்கிறீர் என்று நான் அறிவேன்," என்று சொன்னேன். அங்கே, அவளுக்கு அருகில்தான், பனியன், பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ் போன்ற வர்களும், வில்லியம் கௌப்பரும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள், பின்னர் அங்கி ருக்கும் தேவாலயக் கல்லறையில், யோவானின் சரீரத்தின் மீதங்கள் மண்ணோடு மண்ணாகக் கிடக்கின்றன. 52 பின்பு சீமோன் சொன்னார், "அப்பா என்னிடம் பலமுறை சொல்லியிருந்தார், 'இப்போது, சீமோன், மகனே, மேசியாவின் வருகைக்குச் சற்று முன்னதாக, மக்களிடையே ஒரு பெரிய கலக்கம் ஏற்படும், சத்துரு பல பொய்யான காரியங்களை வெளியிட்டு, அதை மேசியா என்று அழைப்பான். என் மகனே சீமோனே, நீ இதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உண்மையான மேசியா எப்படி இருப்பார், அவர் பார்க்க எப்படி இருப்பார், அவர் எதைப் போல இருப்பார் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். உண்மையான மேசியா பைபிளின் படியும், நமது தீர்க்கதரிசிகள் நமக்குச் சொன்னதின் படியும் இருப்பார், மோசே சொன்னார், "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை... எழும்பப்பண்ணுவார்."'" 53 அவர் கையை நீட்டி அந்திரேயாவைத் தொட்டிருக்க வேண்டும், அவர் சொன்னார், "அந்திரேயா முதலில் அவர் சொல்வதைக் கேட்கச் சென்றார். அங்கே கீழே யோவான் மேசியாவின் வருகை வரப்போகிறது என்று பிரசங்கித்து, தீர்க்கதரிசனமாகச் சொல்லிக் கொண்டிருந்ததை என்னால் நம்ப முடியவில்லை, என்னைப் பொறுத்தவரை அது நடக்கும் இன்னொரு சாதாரண காரியமாகவே இருந்தது, ஆனால் ஒரு நாள் அந்திரேயா வந்து இந்த மனிதனை நான் வந்து பார்க்க வேண்டும், ஒரு முறையாவது அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார், அப்போது என் தந்தை என்னிடம் சொன்னதையும், இந்த மேசியா ஒரு தேவ-தீர்க்கதரிசியாக இருப்பார் என்று வேதவாக்கியங்கள் கூறியதையும் நான் என் இருதயத்தில் வைத்திருந்தேன். 54 "நான் என் சகோதரன் அந்திரேயாவுடன் அந்தக் கூட்டத்திற்குள் நடந்து சென்றபோது, அவர் சட்டென்று திரும்பி அந்த மக்கள் கூட்டத்திலே நேராக என்னைப் பார்த்தார். நான் தாகத்தோடு இருக்கிறேன் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்." தேவன் வழக்கமாக தாகமாக இருப்பவர்களிடமும், அவரை எப்படியாவது பற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக விரும்புபவர்களிடமுமே வருகிறார். 55 "அவர் என்னைப் பார்த்திருக்க வேண்டும், அப்படிப் பார்த்தபோது, 'உன் பெயர் சீமோன், நீ யோனாவின் மகன்' என்று சொன்னார். அது எனக்கு அனைத்தையும் உறுதிப்படுத்தியது, ஏனென்றால் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று வேத வாக்கியங்கள் கூறுவதாக என் தந்தை என்னிடம் சொன்னார் என்பது எனக்குத் தெரியும், என்னைப் பார்த்திராத இந்த மனிதர் என்னை என் பெயரைக் கொண்டு அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அவர் என் தந்தையையும் அறிந்திருந்தார், நான் யோனாவின் மகன் என்று என்னிடம் கூறினார். அது அனைத்தையும் உறுதிப்படுத்தியது." 56 பிலிப்பு, அந்த நேரத்தில் அவர் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். இப்போது, இவர்கள் கிறிஸ்துவின் சொந்த சீஷர்கள், நாம்... அவர்கள் ஒரு சாட்சிக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், வெளியுலகம் அல்ல, அவருடன் வாழ்ந்து, அவருடன் உறங்கி, அவருடன் தங்கியிருந்து, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, அவர் பேசுவதையும் உரையாடுவதையும் கேட்ட வர்கள். 57 பிலிப்பு சொன்னார், "சீமோனே, அது என்னையும் நம்பவைத்தது, ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான் வேதவாக்கியங்களை வாசித்து, அவற்றை உபதேசிக்கப் பட்டிருக்கிறேன், மேலும் எங்கள் தீர்க்கதரி சிகளை நம்பும்படி ஒரு யூதனாக நாங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் அறிவேன். மேசியாவாகிய தேவனுடைய குமாரன் மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று அந்தத் தீர்க்கதரிசனம் உண்மையாகவே கூறியது. தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்ததை நான் கண்டபோது, அது மேசியாதான் என்பதை நான் அறிந்துகொண்டேன், ஏனென்றால் நமக்கு ஒரு தீர்க்கதரிசி வந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன," மல்கியாவுக்குப் பிறகு சுமார் நானூறு ஆண்டுகள் என்று நினைக்கிறேன், "அதற்கு அடுத்ததாகத் தோன்றவிருப்பது மேசியாதான் என்பதை நான் அறிந்திருந்தேன், அது அவர்தான். எனவே, நான் மலையிலிருந்து கீழே ஓடி என் நண்பன் பிலிப்பிடம் சென்றேன்." 58 நேற்றிரவு நாம் அவனைக் கூட்டிக்கொண்டு சென்று பார்த்தபோது, பிலிப்பு நாத்தான்வேலை ஒரு மரத்தின் கீழே ஜெபித்துக்கொண்டிருக்கக் கண்டார், (மன்னிக் கவும், நாத்தான்வேலைக் கண்டார்), "நாங்கள் கண்டவரைக் வந்து பார், அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசு," என்றார். அவர், "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?" என்றார். அதற்கு அவர், "வந்து பார். நீயே வந்து தெரிந்துகொள்," என்றார். அவர் மலையைச் சுற்றி வந்தபோது, அவர் நடந்தவற்றையெல்லாம் அவரிடம் சொல்லி, "மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று உனக்குத் தெரியும், அதை நாம் அறிவோம்," என்றார். "ஓ, ஆம்," நாத்தான்வேல் சொன்னார், "எனக்குத் தெரியும் அது ஒரு, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்." "சரி, அவர் அந்தச் செயல்களைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். எந்த சந்தேகமும் இல்லாமல், எனக்கு அது தெரியும்; நான் அதைப் பார்த்திருக்கிறேன், நான் அதைச் சோதித்துப் பார்த்திருக்கிறேன், அது உண்மை என்று எனக்குத் தெரியும்." "சரி, நான் வந்து பார்க்கிறேன்." 59 அவர்கள் மலையைச் சுற்றிச் சென்றார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் சமுகத்திற்குள் சென்றபோது, அவர் நாத்தான் வேலைக் கவனித்துப் பார்த்து, அவர் வரிசையில் வந்தபோது, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்," என்று சொன்னார். அவர் அவரை நோக்கி, "நீர் என்னை எப்படி அறிவீர், ரபீ?" போதகரே. "உமது வாழ்நாளில் நீர் என்னை ஒருபோதும் பார்த்ததில்லை. நீர் என்னை எப்படி அறிந்தீர்?" என்றார். அதற்கு அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்," என்றார். இப்போது, வேதவாக்கியம் அதைத் தான் சொல்கிறது. 60 பிலிப்பு ஒரு பைபிள் மாணவனாக இருந்ததினால், மேசியா இப்படித்தான் இருப்பார் என்பதை அறிந்திருந்ததால், அவர் சொன்னார், "ரபீ, நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் ராஜா." 61 இயேசு அவரை நோக்கி, "சரி, நான் இதை உனக்குச் சொன்னதினால் விசுவாசிக்கிறாயா? இதிலும் பெரியவைகளைக் காண்பாய். நீ அவ்வளவு தூரம் விசுவாசித்தால், அதிலும் பெரியவைகளைக் காண்பாய்," என்றார். முதலில் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 62 இப்போது, அங்கே அமர்ந்திருந்த இளம் யாக்கோபு, அல்லது அவர்களில் ஒருவர் இப்படிச் சொல்லியிருக்க வேண்டும், "உங்களுக்குத் தெரியும் ஒரு நாள்... எரிகோவில் வியாபாரம் செய்யும், வரிவசூலிக்கும் சகேயுவின் மனைவியான ரெபெக்காளை நம் அனைவருக்கும் தெரியும். ரெபெக்காள் சகோதரி, சகேயு இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் கடினமாக ஜெபித்தாள் என்பதையும், அவள் கண்ட காரியங்களை எல்லாம் அவரிடம் சொன்னாள் என்பதையும் நாம் அறிவோம், ஆனால் அவனுடைய ரபீ, இயேசுவைக் குறித்து ஒன்றும் இல்லை என்று அவரிடம் சொல்லியிருந்தார், ஏனென்றால் அன்றைய குருமார்களிடையே அவர் அங்கீகரிக்கப்படவில்லை, அதனால் அவர் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார். 63 "எனவே, முழு நற்செய்தி வியாபாரிகள் (Full Gospel Businessmen) காலை உணவுக் கூட்டத்தில் சகேயுவின் சாட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவர் உள்ளே வந்து நடந்தவற்றைக் குறித்து நம்மிடம் சொன்னாரே? அவர் இயேசுவைப் பார்க்கக் கீழே சென்றதாகவும், அங்கே மிக அதிகமான கூட்டம் இருந்ததாகவும் சொன்னார்." எப்படியோ கிறிஸ்து எங்கிருக்கிறாரோ, அங்கே அப்படித்தான்: "நான்... உயர்த்தப் பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்." இழுக்கப்படக்கூடிய அனைவ ரையும். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்." 64 அவர் சொன்னார், "சகேயு அதைப் பார்த்தார், அவர் சாட்சி சொன்னபடியே, அவர் குள்ளமானவராக இருந்ததால், அவரால் போதகரைப் பார்க்க முடியவில்லை, அதனால் அவர் மற்றொரு மூலைக்கு ஓடினார், அவர் நகரத்தின் வழியே எந்தப் பாதையில் செல்வார் என்பதை அறிந்து, அவர் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, அவர்-அவர் சொன்னார், 'இப்போது, இந்த இரண்டு கிளைகளும் சந்திக்கும் இடத்தில் நான் உட்கார்ந்து கொள்கிறேன்.'" இரண்டு வழிகள் சந்திக்கும் இடத்தில் அமர்வது ஒரு நல்ல இடம், அது உங்கள் எண்ணங்களும் தேவனுடைய வார்த்தையும்தான். உங்கள் எண்ணங்களும் அவருடைய வார்த்தையும் சந்திக்கும் இடம், அங்கிருந்து நீங்கள் எந்த வழியில் செல்லப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க சில நிமிடங்கள் ஓய்வெடுக்க அது ஒரு நல்ல இடம். 65 "அவர் கீழே உட்கார்ந்து, அவர் சொன்னார், 'இந்த கலிலேயர் ஒரு தீர்க்கதரிசி என்று என் மனைவி என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இப்போது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், நான் அவரை நம்பப் போகிறேன், ஏனென்றால், "உங்களுக் குள்ளே ஒருவன்... ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால், கர்த்தராகிய நான் எனக்குள்ளே என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன், அவன் சொல்வது நடந்தால் அவனுக்குச் செவிகொடுங்கள், நான் அவனுடனே இருக்கிறேன், ஆனால் அது நடக்கவில்லை என்றால், அவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம்" என்று நமது பைபிள் சொல்கிறது என்பதை நான் அறிவேன். 66 "'எனவே நான்-நான் அறிவேன், என் ரபீ என்னிடம் கூறியது போல, அவரைப் போல ஏழையாகப் பிறந்த ஒரு மனிதர், அவருக்கு இருக்கும் பெயரைப் போன்ற ஒரு பெயருடன், ஒரு ரபீயாக வளர்க்கப்படாத ஒருவரை நான் நம்பவில்லை... அவர் பேசும் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அனைத்தையும் நான்-நான் நம்பவில்லை. அதனால் நான்-நான் காத்திருக்கப் போகிறேன், நான் அவரைப் பார்க்கும்போது, என் மனதில் இருப்பதை அவருக்குத் தைரியமாகச் சொல்லப் போகிறேன்.' 67 "ரெபெக்காள் தன்னிடம் சொன்னதைக் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கியபோது, 'சரி, ஒருவேளை அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கலாம், ஆனால் அவர் அப்படி இருந்தால், நான் என் கருத்தை மட்டும் தெரிந்துகொண்டு, பிறகு திரும்பிச் சென்று ரெபெக்காளிடம் சொல்வேன், ஏனென்றால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.' 68 "அதனால் அவர் கிளைகளின் மேல் ஏறி, இலைகளையெல்லாம் தன்னைச் சுற்றி இழுத்து, தன்னை யாரும் பார்க்க முடியாதபடி மறைத்துக்கொண்டார், தன்னை உருமறைப்பு செய்துகொண்டார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, வளைவில் ஏதோ சத்தம் வருவதை அவர் கேட்டார்." இது ஆச்சரியமான ஒன்று, இயேசு எங்கிருக்கிறாரோ அங்கே வழக்கமாக ஏதோ ஒரு வகையான சத்தம் இருக்கும், அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எப்போதும் இருக்கும். ஆரோன் மாதுளம் பழத்துடனும் மணியுடனும் உள்ளே செல்வது போல, அவர் அதிக சத்தம் போடமாட்டார், ஏன், அவர் உயிரோடு இருக்கிறாரா என்று அவர்களுக்குத் தெரியாது. அதுதான் இன்றைய சபையின் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன், அது மிகவும் செத்துப் போய்விட்டது, இனி நாம் எதையும் கேட்பதில்லை; எனவே, எங்கே ஜீவன் இருக்கிறதோ, அங்கே சத்தம் இருக்கும். 69 "இப்போது, அவர் சொன்னார் என்று நாம் காண்கிறோம், இயேசு அந்த மூலைக்கு வந்தபோது, அவர் அவரைப் பார்க்க முடிந்தது, இயேசு தன்னை பார்க்காதபடி அவர் தனக்கு ஒரு சிறிய உருமறைப்பை அமைத்திருந்தார். அதனால், அவரிடம் ஒரு இலை இருந்தது, நகரத்தின் ஒரு வியாபாரி, மரத்தின் மேல் அமர்ந்திருப்பதை அவர் பார்க்க அவர் விரும்பவில்லை என்பதால், அவர் இந்த இலையைக் கீழே இழுத்து வெளியே பார்த்தார், உங்களுக்குத் தெரியும், அது கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும். எப்படியிருந்தாலும், இந்த ஹோலி-ரோலர் (Holy-roller) அவர் கொண்டிருந்த பெயருடன் உள்ளே வருவது, அவரைப் போன்ற ஒருவரோடு அவர் சேர்ந்திருப்பதை அவர்கள் பார்த்தால் அது அவனுடைய வியாபாரத்தைப் பாதிக்கும். 70 "அப்படியிருந்தும், ரெபெக்காள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள் என்பதை அவர் கண்டறிய விரும்பினார், அதனால் அவர் அங்கே அமர்ந்திருந்தார், தன் இலையை மேலே உயர்த்திக்கொண்டு, 'எனக்கு ஒரு சத்தம் கேட்கிறது, அதனால் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர் இந்த வழியே வருவார்' என்று சொன்னார். 71 "அவர் அந்தச் சத்தத்தைக் கேட்டார், அவர் அந்த மூலையைச் சுற்றிப் பார்த்தார், அங்கே பெரிய, முரட்டு மீன்பிடிப்பவர்கள் வந்துகொண்டிருந்தார்கள், அவர்கள், 'மக்களே, என்னை மன்னியுங்கள், எங்கள்-எங்கள் சகோதரர் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவர்-அவர்-அவர் இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறார், அவர் எருசலேமுக்குப் போக வேண்டும், என்று அவர் சொன்னார். நீங்கள் அனைவரும் சற்று ஒதுங்கி நின்று, அவர் வெளியே செல்ல வழிவிடுவீர்களா?' என்று மிகவும் சாதுரியத்துடனும் கனிவுடனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். "பின்னாலே வந்த மற்ற சீஷர்கள், 'மக்களே, எங்களுக்கு நேரம் இருந்திருக்கலாம் என்று விரும்புகிறோம், ஆனால் எங்களுக்கு நேரமில்லை,' என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். 72 "கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, அவர் அந்த மூலையைத் திரும்பியபோது, சகேயு தன் இலையைக் கீழே திருப்பி, அவர் அவ்வாறு வருவதைப் பார்க்க ஆரம்பித்தார்." உங்களுக்குத் தெரியும், எந்தவொரு மனிதனும் கிறிஸ்துவை நேராகப் பார்த்துவிட்டு மீண்டும் அதே போல் உணர முடியும் என்று நான் நம்பவில்லை, நான்-நான் அதை நம்பவில்லை. 73 "ஏதோவொன்று அவரைத் தொட ஆரம்பித்தது. அவர் சொல்லிக்கொண்டார், 'உனக்குத் தெரியுமா, நான்-நான், ஒருவேளை ரெபெக்காள் சொன்னது சரியாக இருக்கலாம், ஆனால் நான் அவரை நன்றாகப் பார்க்கப் போகிறேன், அப்புறம் எப்போதாவது அவர் சொல்வதைக் கேட்பேன், ஏனென்றால் அவருக்கு என்னைத் தெரியாது, நான் இங்கே ஒரு வியாபாரி, அவர் இப்போதுதான் நகரத்திற்குள் நுழைந்திருக்கிறார், அதனால் அவருக்கு என்னைத் தெரியாது, என்னைப் பற்றி எதுவும் தெரியாது, என் நிலைமையும் அவருக்குத் தெரியாது, அதனால் நான் இங்கே மரத்திலேயே உட்கார்ந்திருப்பேன்.' 74 "அவர் அந்த வழியே வந்தார், அவர் அந்த நடைபாதையைக் கடந்து, கீழே வந்து, அந்த மரத்தின் நேர் கீழே வந்தபோது, அவர் நின்று மேலே பார்த்து, 'சகேயுவே, இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிற்கு மதிய உணவிற்காக வருகிறேன்' என்றார். 75 "ஓ, உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என்று யாக்கோபு சொன்னார். "அது எனக்கு அனைத்தையும் உறுதிப்படுத்தியது, மோசேயால் பேசப்பட்ட அந்தத் தீர்க்கதரிசி அவர்தான் என்று நான் அறிந்திருந்தேன், ஏனென்றால் நாங்கள் இப்போதுதான் நகரத்திற்குள் நுழைந்திருந்தோம். அவர் மரத்தின் மேல் இருக்கிறார் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவனுடைய பெயர் சகேயு என்பதையும், அவரைப் பற்றிய அனைத்தையும் அவர் எப்படி அறிந்தார்? அது எனக்கு அனைத்தையும் உறுதிப்படுத்தியது, ஏனென்றால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று பைபிள் சொன்னது." 76 "சரி," பின்பு இன்னொருவர் பேசினார், அவர் சொன்னார், "நாம் நகரத்தை விட்டு வெளியேறியபோது இருந்த பார்வையற்ற பர்திமேயுவைப் பற்றி என்ன சொல்வது? அவனுக்குப் பார்வை இருந்த நாட்களைக் குறித்து அவன் கனவு கண்டுகொண்டு அங்கே அமர்ந்திருந்தபோது, யெகோவா ஒருமுறை மக்களிடம் பேசிய அந்தச் சிறந்த நாளைப் பற்றி அவனுடைய தாய் அவனிடம் எப்படிக் கூறினாள் என்று அவன் சொன்னான், ஆனால் அவன் இத்தனை வருடங்களாகப் பார்வையற்றவனாக இருந்தான். 77 "நாங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்தபோது, மக்கள் அவரைக் கேலி செய்ததையும், ஆசாரியர்கள், 'மரித்தோரை எழுப்பியவரே, இங்கே எங்களிடம் மரித்தவர்கள் நிறைந்த ஒரு மயானம் இருக்கிறது, மேலே வந்து அவர்களை எழுப்புங்கள்!' என்று சத்தமிட்டதையும் நினைத்துப்பாருங்கள்." 78 தேவன் மக்களுக்காக வித்தை காட்டுவதில்லை என்பதைப் பாருங்கள். பிதா தமக்குக் காண்பிக்கிறதை மட்டுமே இயேசு செய்கிறார், யோவான் 5-ம் அதிகாரத்தில், அதை மட்டும்தான் அவர் செய்கிறார் என்று அவர் கூறினார். உங்களுக்குத் தெரியுமா, இன்றும் உலகத்தில் அந்தப் பொல்லாத ஆவிகள் இருக்கின்றன, அவை, "அவர் இவனைச் சுகப்படுத்துவதை நான் பார்க்கிறேன். அவர் அவனைச் சுகப்படுத்துவதை நான் பார்க்கிறேன்," என்று சொல்லும். புரிகிறதா? அது அதே பொல்லாத ஆவிதான்; அவர்களுக்கு அது தெரியவில்லை. 79 சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் சோதிக்கப்பட்டபோது, அதே ஆவி அங்கே மேலே உட்கார்ந்துகொண்டு, "நீர் தேவனுடைய குமாரனேயானால், எனக்கு முன்பாக இங்கே ஒரு அற்புதத்தைச் செய்யும், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி செய்து சாப்பிடும், நான் உம்மை விசுவாசிப்பேன்," என்று சொன்னது. புரிகிறதா? 80 இயேசு, "ஆனால், மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல... பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே," என்றார். சாத்தானுக்காக அவர் வித்தை காட்டவில்லை. 81 அவர்கள் அவரை முற்றத்தில் பிடித்து வைத்து, ஒரு துணியால் அவர் முகத்தை மூடி, அவர் கண்களைக் கட்டி, ஒரு கோலை எடுத்து அவருடைய விலையேறப்பெற்ற தலையில் அடித்து, "நீ இப்போது ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், எங்களால் சொல்ல முடியுமானால், நீ அந்த மேசியா-தீர்க்கதரிசியாக இருந்தால், உன் தலையில் அடித்தது யார் என்று சொல்" என்றார்கள், அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவர்... தேவனுடைய வல்லமைகளும் வரங்களும் பெருமைய டிப்பதற்காக அல்ல, அவை தேவனுக்கு ஊழியம் செய்வதற்காகவே. அவை தேவனுடைய மகிமைக்காக ஒருவருக்கு உதவி செய்வதற்காகவேயன்றி, ஒரு பெருமைக் காரனைப்போல வெளியே வந்து, "நான், என் மகத்துவம்!" என்று சொல்வதற்காக அல்ல. அது அப்படிப்பட்டதல்ல. ஒரு மனிதன் அப்படிச் செய்யும்போது, அவன் என் பார்வையில் சிறியவன். யார் பெரியவர்? ஒருவரே: தேவன். 82 பின்பு உடனடியாக, அதன்பின்பு, அந்திரேயா இதைச் சொல்லியிருக்கலாம்: "ஆனால் சகோதரர்களே, அவர் நம்மைப் பட்டணத்திற்குள் அனுப்பின அந்த நேரத்தை நினைத்துப்பாருங்கள்? அவர் எரிகோவுக்குப் போவதாகவும், ஆனால் எருசலேமிலிருந்து சமாரியா வழியாக, சமாரியாவுக்குச் சென்று பின்னர் எரிகோவுக்குப் போக வேண்டும் என்று அந்த காலையில் நமக்குச் சொன்னார். அவர் எவ்வளவு சோர்வாக இருந்தார் என்று நினைவிருக்கிறதா? நாள் முழுவதும் நாம், 'ஏன்-ஏன் நீர் ஆகாரம் சாப்பிடக்கூடாது? நீர் ஏன் அப்படிச் செய்யக்கூடாது?' என்று கேட்டோம். 83 "அதற்கு அவர், 'நான் இங்கே காத்திருப்பேன், நீங்கள் போய் உங்களுக்காக ஆகாரம் வாங்கிக்கொண்டு வாருங்கள்' என்றார். இப்போது, நாம் வெளியே சென்றிருக்கையில், நாம் ஆகாரம் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது, உங்களுக்கு நினைவிருக்கிறதா, நாம் வந்தபோது, அங்கு ஒரு ஸ்திரீ வந்து கொண்டிருந்தாள், அவர் தனிமையில் ஒரு-ஒரு மோசமான-மோசமான நிலையில் இருந்த ஸ்திரீயோடு இருந்தார் என்று நாம் கண்டுகொண்டோம்?" 84 அவள் ஒரு கறைபட்ட ஸ்திரீ, இன்று நாம் தெருக்களில் நிற்கும் ஒரு சிவப்பு-விளக்கு (red-light) பெண் என்று அழைப்போம். அவளுக்கு, அவளுடைய திருமணங்கள் எல்லாம் குழம்பிப்போயிருந்தன, அவள் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஆண்களுடன் வாழ்ந்து வந்தாள், மிகவும் கறைபட்ட ஒரு நபர். அந்த நாட்களில் அவர்கள் ஒரு உடையை அணிந்திருந்தார்கள், அது அதை நிரூபிக்க வேண்டியிருந்தது. "எனவே நாம் அதைக் கண்டபோது, அங்கு வந்தபோது, அந்த செடியின் பின்னால், அந்த சிறிய சுவரின் பின்னால் நாம் நழுவிச் சென்று, அவர் என்ன சொல்வார் என்று பார்க்க நாம் நினைத்தோம், நினைவிருக்கிறதா? அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் காரியத்தை உறுதிப் படுத்தியது. 85 "அவர் அந்த ஸ்திரீயிடம் குடிக்க தண்ணீர் கேட்டார், அதற்கு அவள், 'எங்களுக்கு இங்கே பிரிவினை இருக்கிறது. நாங்கள்-நாங்கள் அப்படிச் செய்வதில்லை, நீங்கள் யூதர்கள் எங்களைப் போன்ற சமாரிய ஸ்திரீகளிடம் இப்படிக் கேட்பது வழக்கமில்லையே' என்றாள். 86 "அதற்கு அவர், 'நீ யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீ என்னிடம் குடிக்கக் கேட்பாய், நீ இங்கே மொண்டுகொள்ள வராதபடிக்கு நான் உனக்குத் தண்ணீர் கொடுப்பேன்' என்றார். உரையாடல் எப்படித் தொடர்ந்தது என்பது நினைவிருக்கிறதா?" 87 அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? பிதா, யோவான் 5:19-ல் அவர் சொன்னார், இதைக் கேளுங்கள், சகோதரர்களே, சகோதரிகளே: தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, யாரையும் குணமாக்கியதற்கான பெருமையை ஒருபோதும் எடுத்துக் கொள்ளவில்லை, அவர், "கிரியைகளைச் செய்வது நானல்ல, என்னிடத்தில் வாசமா யிருக்கிற என் பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்" என்றார். 88 பின்னர் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். யோவான் 5:19-ல் அவர் இதைச் சொன்னார்; அவர் பெதஸ்தா குளத்திற்குச் சென்றார், அங்கே பெரிய திரளான ஜனங்கள், இன்று இரவு இவ்விடத்தில் இருப்பதை விட அதிகமான ஜனங்கள், முடவர்கள், குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள், ஊனமுற்றவர்கள் கிடந்தார்கள். இப்போது, வேதம் அதைச் சொல்கிறது, முடவர்கள், சப்பாணிகள், குருடர்கள், சூம்பின உறுப்புடையவர்கள், இதோ அவர் வருகிறார்! அங்கே சில நாட்களுக்கு முன்பாகத்தான், ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகமானாள். இதோ அவர் வருகிறார், வஸ்திரங்கள் வல்லமையால் நிரம்பியிருக்கிறது, அவர் நடந்து, தலையில் நீர் கோர்த்திருந்த குழந்தையை வைத்திருந்த தாயைக் கடந்து சென்றார், குருடனைக் கடந்து சென்றார். 89 நீங்கள் அதன் வரலாற்றை எப்போதாவது கவனித்திருந்தால், தேவதூதன் இறங்கி தண்ணீரை கலக்குவான். கலக்கப்பட்ட தண்ணீர் என்னவென்று உங்களுக்குத் தெரியும், நீரோட்டம் ஒரு திசையிலும், காற்று அதை வேறு திசையிலும் வீசும்போது, அது ஒரு ஆபத்தான தண்ணீர். மேலும் அது ஒரு தேவதூதன் என்று அவர்கள் நம்பினார்கள், எப்பொழுதும் தண்ணீருக்குள் இறங்கி, போதுமான விசுவாசம் உள்ளவர், தண்ணீர் கலங்குவதை நிறுத்தியவுடன், அவர்களுக்கு இருந்த வியாதி எதுவோ அதிலிருந்து அவர்கள் சுகமானார்கள். அவர்கள் திரளாக அங்கே கிடந்தார்கள். அவர்களில் அநேகர் அதை நம்பவில்லை, ஆனால் அதை நம்பியவர்களுக்கு, அது அவர்களுக்கு சுகமளிப்பதாக இருந்தது. தேவன் தம்முடைய மக்களைக் குணமாக்க எப்போதும் ஒரு வழியைக் கொண்டிருந்தார். 90 எனவே முதலாவதாக இறங்குகிறவர்கள், அதைக் குறித்து நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன், அங்கு அவர்கள் முதலா வதாகச் செல்ல முண்டியடித்துக்கொண்டு, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொள்வார்கள் என்றும் சொன்னார்கள், ஏனென்றால் முதலாவதாக இறங்கியவர் தேவதூதனின் வல்லமையை தன்வசப்படுத்திக் கொள்ளப் போதுமான விசுவாசத்தோடு இறங்கியவுடன், அவர் ஒருவேளை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு, அடுத்த பருவகாலம் வரும்வரை திரும்பி வரமாட்டார். எனவே அவர்கள் அங்கே தொடர்ந்து காத்திருந்தார்கள். என்ன ஒரு பொறுமை! 91 மேலும் இயேசு குருடர், செவிடர், முடவர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடை யவர்கள் ஆகியோரைக் கடந்து நடந்தார், பாயில் படுத்திருந்த ஒரு மனிதனிடம் வரும்வரை, அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கலிபோர்னியாவில் உள்ள உங்களுக்கு எத்தனை பேருக்கு பாய் என்றால் என்னவென்று தெரியும்? சரி, நீங்கள் கென்டக்கியின் எந்தப் பகுதியிலிருந்து வந்தீர்கள்? நான் அதில் தான் வளர்க்கப்பட்டேன். தரையில் எதையாவது விரித்து, படுத்துக்கொள்வது. 92 பாயில் படுத்திருக்கையில், அவனுக்கு புராஸ்டேட் பிரச்சனை இருந்திருக்கலாம், அவனுக்கு-அவனுக்கு காசநோய் இருந்தி ருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், அவனுக்கு அது முப்பத்தெட்டு வருடங்களாக இருந்தது, அது அவனைக் கட்டுப் படுத்தியிருந்தது, அது அவனைக் கொல்லப் போவதில்லை, அவனால் நடக்க முடியும். இயேசு அறிந்திருந்தார், கவனியுங்கள், இந்த முழு நேரமும் அவன் இந்த நிலையில் இருந்ததை இயேசு அறிந்து, "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?" என்றார். ஏன் குருடனைக் கேட்கவில்லை? ஏன் ஊனமுற்றவனைக் கேட்கவில்லை? ஆனால் பாருங்கள், அவர் வழிநடத்தப்பட்டார். 93 இப்போது, அவனுடைய பதிலைக் கவனியுங்கள், அவன், "என்னைத் தண்ணீரில் இறக்கிவிட எனக்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளாக, என்னை விட நல்ல நிலையில் இருக்கும் வேறொருவன் ஓடி, எனக்குமுன்னே இறங்கிவிடுகிறான்" என்றான், பாருங்கள், "எனக்கு முன்னால் இறங்கிவிடுகிறான்." அவனால் நடக்க முடியும், அவனால் போக முடியும், ஆனால் அங்கு நடக்க முடியாத சிலரும் இருந்தார்கள். பாருங்கள்? அவருக்கு மன உருக்கம் இருந்தது என்று நாம் சொல்வோமா? மனித அனுதாபம் என்பது மன உருக்கம் அல்ல, தேவனுடைய சித்தத்தை அறிவதே மன உருக்கம் ஆகும். பாருங்கள்? எனவே அவர், "சொஸ்தமாக வேண்டு மென்று விரும்புகிறாயா?" என்றார். அவன், "என்னைத் தண்ணீரில் இறக்கிவிட எனக்கு ஒருவருமில்லை. நான் போகிறதற் குள்ளாக, வேறொருவன் எனக்குமுன்னே இறங்கிவிடுகிறான்" என்றான். அவர், "உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப்போ" என்றார். 94 அவன் வேறு எதையும் கேள்வி கேட்கவில்லை, ஏனென்றால் அவன் கேள்வி கேட்க மாட்டான் என்பதை இயேசு அறிந்திருந்தார், அதை எடுத்து, தன் முதுகில் வைத்துக்கொண்டு நடந்தான். இயேசு அதைக் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டார். அவர் இன்றும் அதையே செய்யட்டும், அவர் அதைக் குறித்துக் கேள்வி கேட்கப்படுவார். 95 யாராவது சொல்வார்கள், "இதோ வயதான சகோதரர் இன்னார், அவர் ஒரு நல்ல வயதான மனிதர், தன் வாழ்நாள் முழுவதும் சபையைச் சேர்ந்தவர், மூலையில் பென்சில்களை விற்கிறார், அவரை சுகமாக்கும். ஏன் நீர் அவரைக் கடந்து சென்றீர்?" 96 அதே நாளில் அவர்கள் அவரைப் பிடித்து, கேள்வியைக் கேட்டபோது, இயேசு அவர்களுக்கு அளித்த பதிலைக் கவனியுங்கள், யோவான் 5:19: "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவா னவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, குமாரன் தாமாய்ச் செய்யமாட்டார்." அதுதான்-அதுதான் வேதம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? வேதவாக்கியங்கள் தவறாது, எனவே தேவன் ஒரு தரிசனத்தில் தமக்குக் காண்பித்ததை மட்டுமே இயேசு செய்ய முடிந்தது, அது அவரை ஒரு தீர்க்கதரிசியாக்கியது, ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர், அவர் தேவனாகிய-தீர்க்கதரிசியாக இருந்தார், அவர் தீர்க்கதரிசிகளின் தேவனாக இருந்தார். 97 இன்று சில மக்கள் அவருடைய தெய்வீகத்தை அவரிடமிருந்து எடுத்துவிட முயற்சிக்கிறார்கள், மேசியாவாகிய அவருடைய அடையாளம் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளம், ஆனால் அவருடைய... மீட்பில் அவர் தேவனாக இருந்தார். 98 கன்னி மரியாளுக்கு, ஒரு ஸ்திரீ, கன்னி, எந்த மனிதனையும் அறியாதவள், பரிசுத்த ஆவியானவர் அவள்மேல் நிழலிட்டு ஒரு இரத்த அணுவை உருவாக்கினார், அந்த இரத்த அணு தேவனுடைய குமாரனைப் பிறப்பித்தது, அவர் யூதனுமல்ல புறஜாதியுமல்ல, அவர் தேவன். தேவனுடைய இரத்தத்தினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று வேதம் சொல்கிறது. இரத்தம் ஆண் பாலினத்திலிருந்து வருகிறது, ஹீமோகுளோபின் ஆண் பாலினத்திலிருந்து வருகிறது. 99 மக்களே, இங்கே வசந்த காலம் வந்திருக்கிறது. இன்று நான் கவனித்துக் கொண்டிருந்தேன், புதரில் ஒரு சிறிய பறவை தனக்கு ஒரு கூட்டை கட்டிக்கொண்டிருந்தது. ஓ, அவை தங்களுக்கு ஒரு கூட்டைக் கட்டும். அந்த வயதான தாய்ப்பறவை அந்தக் கூட்டில் உட்கார்ந்து ஒரு கூடு முழுவதும் முட்டைகளை இடலாம், அவள் தன் துணையுடன் சேர்ந்திருக்காவிட்டால், அவை குஞ்சு பொரிக்காது. அது சரிதான். அவள் அவற்றின் மேல் உட்கார்ந்து மிகவும் விசுவாசமாக இருக்கலாம், அந்த முட்டைகளை மிகவும் விசுவாசமாகத் திருப்பிவிடலாம், கூட்டை விட்டுப் பறக்க முடியாத அளவுக்கு மிகவும் மெலிந்து போகும் வரை தன்னைத் தானே பட்டினி போட்டுக் கொள்ளலாம், அவள் தன் துணையுடன் சேர்ந்திருக்காவிட்டால், அவை குஞ்சு பொரிக்காது, அவற்றில் எந்த இரத்த அணுவும் இல்லை. ஜீவன் இரத்தத்திலிருந்து வருகிறது, ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது. 100 அது இன்றைய சபைகளைப் போன்றது, உங்களால் முடியும்... நாம் முன்னெப் போதையும் விட மிகப்பெரிய சபைகளைக் கொண்டிருக்கிறோம், முன்னெப்போதையும் விட அதிக அங்கத்தினர்களைக் கொண்டிருக்கிறோம், முன்னெப்போதையும் விட சிறந்த ஆடைகளை அணிகிறோம், முன்னெப்போதையும் விட சிறப்பாக உணவருந்துகிறோம், முன்னெப் போதையும் விட அதிக பணம் வைத்திருக்கிறோம், முன்னெப்போதையும் விட அதிக வியாதிகளைக் கொண்டிருக்கிறோம், ஏனென்றால் நாம் முன்னெப்போதையும் விட அதிக அவிசுவாசத்தைக் கொண்டிருக்கிறோம். 101 இது அப்படித்தான், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அந்த முட்டைகள் அங்கேயே கூட்டில் கிடந்து அழுகிப்போகும், அப்படியே சபை அங்கத்தினர்களும் துணையாகிய இயேசுகிறிஸ்துவுடன் சேர்ந்திருக் காவிட்டால் ஆவார்கள், கூட்டைக் சுத்தம் செய்யவும், விசுவாசமுள்ள மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட, ஜீவனுள்ள தேவன்மேல் ஜீவனுள்ள விசுவாசத்தைக் கொண்ட, துணையாகிய கிறிஸ்து இயேசுவுடன் சேர்ந்திருந்த ஒருவரைக் கொண்டுவரவும் இதுவே காலம், அது குஞ்சு பொரிக்கும் ஒன்றாகவும், ஜீவனைக் கொண்டுவரும் ஒன்றாகவும் இருக்கும். நிச்சயமாக. 102 இயேசுவால் மட்டுமே செய்ய முடியும், அவர் சொன்னார், மேலும் வேதவாக்கியங்கள் தவறாதவை, அவர் சொன்னார், "பிதா முதலில் செய்வதை நான் காணும் வரை, நானாகவே எதையும் செய்வதில்லை." இப்போது, அவர் அதைக் கண்டதாகச் சொன்னார், பாருங்கள். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ..." எம்பாட்டிக் டயக் லாட்டைத் திரும்பிப் பாருங்கள், வார்த்தை சரியானதா என்று பாருங்கள், பாருங்கள். அதைப் பாருங்கள், டூவே மொழிபெயர்ப்பில் கூட, எல்லா மொழிபெயர்ப்புகளும் அதை ஒரே மாதிரியாகத் தருகின்றன: "பிதா அதைச் செய்வதை நான் காணும் வரை. பிதா கிரியை செய்கிறார், பிதா என்ன செய்கிறாரோ, அதை அவர் எனக்குக் காண்பிக்கிறார், நான் சென்று அவருக்காக அதைச் செய்து காட்டுகிறேன்." 103 பைபிளில் உள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அப்படித்தான் செய்தார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு தரிசனத்தின் மூலம் பார்ப்பதே, அந்த நாளில் மேசியாவின் அடையாளமாக இருந்தது. அது அந்த நாளில் மேசியாவின் அடையாளமாக இருந்தால், யூதர்களின் காலத்தின் முடிவில், அவர் கடைசி நாட்களில் அதையே செய்வதாக வாக்குத்தத்தம் அளித்தார், அது எழும்புவதை நாம் காணும் காலம் இதுவே. 104 நாம் கடைசி நாளில் இருக்கிறோம், உலகம் ஒரு நரம்புத் தளர்ச்சியில் இருக்கிறது, அவள் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட ஆயத்தமாக இருக்கிறாள், அவர்கள் நிராகரித்து, மறுதலித்ததினால், பரிசுத்தஆவியானவர் அவர்களின் இருதயங்களைக் காயப்படுத்தி யுள்ளார், மற்றும் தேவன்... 105 சில வாரங்களுக்கு முன்பு, கென்டக்கியின் லூயிஸ்வில்லேயில் உள்ள ஒரு டென்-சென்ட் கடையில் ஒரு பெண்மணி இருப்பதைப் போல, அவளிடம் ஒரு சிறு பையன் இருந்தான், அவள் அவனைச் சுற்றிக்கொண்டு, அவனுக்குப் பொருட்களைக் காண்பித்து, "பார் கண்ணா, பார் கண்ணா, பார் கண்ணா" என்று சொன்னாள், அந்தச் சிறு பையன் சும்மா உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள், சிறிது நேரத்திற்குப் பிறகு, கவுண்டரின் மேல் விழுந்து அலறத் தொடங்கினாள். டென்-சென்ட் கடையில் இருந்த சிலர் அவளிடம் சென்று, "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். 106 அவள், "இது என் சிறு பையன் தான்" என்றாள். அவள், "இது அப்படி இருக்க முடியாது! அவன் குணமாகிவிட்டதாக டாக்டர் சொன்னார், ஆனால் அவன் அப்படி இல்லை" என்றாள். "சில மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுவன் வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான்" என்றும், "என்னால் அவனுடைய கவனத்தை எதற்கும் ஈர்க்க முடியவில்லை" என்றும் சொன்னாள். "அவனுடைய வயதில் உள்ள ஒரு சிறு பையன் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும்" என்று கூறி, "நான் அதை அவனுக்கு முன்பாக அசைப்பேன், அவன் சும்மா உட்கார்ந்து வெறித்துப் பார்ப்பான்" என்றாள். 107 உங்களுக்குத் தெரியுமா சபை, பெந்தெகோஸ்தே சபை, ஓரளவுக்கு அதே வழியைப் பின்பற்றி வருகிறது, தேவன் பைபிளில் உள்ள அனைத்தையும் அவர்களுக்கு முன்பாக அசைத்தார், அவர்கள் இன்னும் சும்மா உட்கார்ந்து வெறித்துப் பார்க்கிறார்கள். ஏதோ தவறாக இருக்கிறது! விழித்தெழுந்து, தேவனை நோக்கிக் கூப்பிட வேண்டிய காலம் இது. நினைவில் கொள்ளுங்கள், காரியங்கள் இந்த வழியில் நடக்கும் போது இது லவோதிக்கேயா சபைக்காலமாக இருக்கும் என்று தேவன் தம்முடைய பைபிளில் முன்னறிவித்தார். இப்போது நாம் அவரை விசுவாசிப்போம். 108 அந்திரேயா கதையைத் தொடர்ந்து சொல்லும்போது, இன்னும் ஓரிரு நிமிடங்களுக்கு, அந்திரேயா சொன்னார், "அவர் அந்த ஸ்திரீயிடம் சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும்..." இப்போது, அவள் ஒரு சமாரிய ஸ்திரீ. நான் நேற்றிரவு சொன்னது போல், பூமியில் மூன்று இன மக்கள் மட்டுமே இருக்கிறார்கள்: காம், சேம், மற்றும் யாப்பேத்தின் மக்கள். நாம் பைபிளை நம்பினால், அவர்கள் அனைவரும் அந்த இரண்டிலிருந்து, அந்த மூன்று மகன்களிட மிருந்து தோன்றியவர்கள், அது யூதர், புறஜாதியார், மற்றும் சமாரியர். 109 பேதுருவிடம் ராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் அதை எங்கே திறந்தார்? பெந்தெகோஸ்தே நாளில், யூதர்களுக்கு; சமாரியாவுக்குச் சென்றார், பிலிப்பு கீழே சென்று அவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பிரசங் கித்து, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தி ருந்தாலும், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தபோதிலும், பேதுருவிடம் திறவுகோல்கள் இருந்தன, கீழே வந்தார், கைகளை வைத்தார், அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்; பின்னர் கொர்நேலியுவின் வீட்டில், புறஜாதியார், அப்போஸ்தலர் 10:49, பேதுரு ஒரு தரிசனத்தின் மூலம் மேலே அனுப்பப்பட்டதை நாம் காண்கிறோம், "அவர் இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்தஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார்." அந்த நேரத்தி லிருந்து பரிசுத்தஆவியானவர், "எவனோ அவன் வரக்கடவன்" என்று ஆனார், ஆனால் அவரிடம் ராஜ்யத்தின் திறவுகோல்கள் இருந்தன. 110 இப்போது, அந்த மூன்று இனங்களையும் கவனியுங்கள்... இப்போது, நான் நேற்றிரவு சொன்னது போல்... நான் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது, இதையே நான் மீண்டும் வேறொரு வழியில் சொல்வதற்குக் காரணம், இன்றிரவு. நான் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது, நீங்கள் பதற்றமாக இருந்தீர்கள், மேலும்-மேலும் எச்சரிக்கை இருக்கிறது, என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது, இன்றிரவு நீங்கள் அமைதியாகவும், நிசப்த மாகவும் இருப்பதால், கவனியுங்கள், யூதர்கள் ஒரு மேசியாவுக்காகக் காத்துக் கொண்டி ருந்தார்கள், மேலும் மேசியா வந்து தம்மை... மேசியாவாக வெளிப்படுத்த வேண்டியிருந்தது. 111 இப்போது, இயேசு வேதத்திற்கு முரணாக வந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் இயேசுவாக இருந்திருக்க மாட்டார், அவர் தேவனுடைய குமாரனாக இருந்திருக்க மாட்டார்; அவர் வேதத்தின்படியே வந்திருக்க வேண்டும், ஆனால் அந்த நாளின் சபைகளின் எண்ணங்களின்படி அல்ல. சபையின் எண்ணங் களுக்கும், அதைப் பற்றிய அவர்களுடைய உபதேசத்திற்கும் அவர் வித்தியாசமாக இருந்தார், ஆனால் வேதவாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தபடியே அவர் வந்தார். அதையேதான் இன்றிரவு, அதே காரியத்தை, உங்கள் நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறேன், அவர் தாம் வருவதாக வாக்குத்தத்தம் அளித்தபடியே வருகிறார். 112 இப்போது, நினைவில் கொள்ளுங்கள், தேவன் எப்போதாவது செயல்பட அழைக்கப் படும்போது, அவர் முதலில் எப்படிச் செயல்படுகிறாரோ, பின்னர் ஒவ்வொரு முறையும் அவர் அதே வழியில்தான் செயல்பட வேண்டும், இல்லையென்றால் அவர் முதலில் செயல்பட்டபோது தவறு செய்திருக்கிறார் என்று அர்த்தம். எனவே, ஒரு மேசியாவுக்காகக் காத்திருந்த யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் அந்த நாளில் தம்மை வெளிப்படுத்தும் வழி அதுவாக இருந்தால்... 113 எந்தப் புறஜாதியாரும் ஒரு மேசியாவுக்காகக் காத்திருக்கவில்லை, நாம் ரோமர்களாகவும் கிரேக்கர்களாகவும் இருந் தோம், அநேகர் இன்னும் செய்வது போல, இரும்பு, எஃகு, பளிங்கு போன்ற தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தோம், மேலும்-மேலும் அதுபோல, நம் முதுகில் ஒரு தடியுடன் இருந்தோம். ஆனால் இப்போது, இரண்டாயிரம் ஆண்டுகால இறையியல் மற்றும் போதனைக்குப் பிறகு, இப்போது புறஜாதி சபை, தெரிந்துகொள்ளப்பட்ட சபை, மேசியா வுக்காகக் காத்திருக்கிறது. இப்போது, அவர் இந்த முறை வரும்போது, அவர் அந்த முறை எப்படிச் செய்தாரோ அப்படியே செயல்பட வேண்டும், அவர் அதே காரியங்களைச் செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் அதைச் செய்வார் என்று வார்த்தை கூறுகிறது. 114 இப்போது, நம்முடைய கிறிஸ்து மரித்துப்போகவில்லை என்பதை நீங்கள் பார்ப்பதற்காக, அவர் நம்முடன் இருக்கிறார், நமக்குள்ளே வாழ்கிறார், இப்போது நம்முடனே இங்கே இருக்கிறார், இப்போது அதை நான் உங்களுக்குக் காண்பிக்க முடிந்தால், நீங்கள் உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்வது மிகவும் எளிதான காரியம், என் கைகள் உங்கள் மேல் வைக்கப்படுவதைப் பற்றியது அல்ல, நான் ஒரு மனிதன், அது அவருடைய கைகள், அவரைக் கண்டுபிடியுங்கள். 115 இப்போது கவனியுங்கள், அவர்கள் இதைக் கேட்டு, இந்த உரையாடலைக் கேட்டபோது (இப்போது, இது சமாரியாவில் உள்ள ஒரு-ஒரு இழிபுகழ் பெற்ற ஸ்திரீ. அவள் ஒரு கெட்ட ஸ்திரீ, அதனால் அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.), மேலும் அவர்கள் கேட்டபோது, அவர், "நீ போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டு இங்கே வா" என்றார். இப்போது, அவளுடைய ஆவியைப் பிடிக்கும் அளவுக்கு அவர் அவளிடம் நீண்ட நேரம் பேசினார். அவர், "நீ போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டு இங்கே வா" என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். 116 "உங்களுக்கு நினைவிருக்கிறதா, சகோதரர்களே," அந்திரேயா மற்ற சகோதரர்களிடம் இப்படிச் சொல்லியிருக்கலாம், "நாமெல்லாம் எப்படி நினைத்தோம் என்று நினைவிருக்கிறதா, 'ஓ-ஓ, ஓ-ஓ, ஒருமுறை அவர் பிடிபட்டுவிட்டார்?' ஏனென்றால், அவளுக்கு-அவளுக்கு ஒரு-ஒரு புருஷன் இல்லை என்று அவர் அவளிடம் சொல்கிறார், 'போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டு இங்கே வா,' மாறாக, 'போய், உன் புருஷனை அழைத்து வா' என்றார், அவளுக்கு ஒரு புருஷன் இருக்கிறான் என்று அவர் அவளிடம் சொல்கிறார், அவளோ தனக்குப் புருஷன் இல்லை என்று சொல்கிறாள், அவள் அவருடைய வார்த்தையை முரண்படுத்திக் கொண்டிருந்தாள். இப்போது என்ன நடக்கப் போகிறது? 117 "நாம் அனைவரும் எப்படி நம் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றோம், மேலும்-மேலும் நமக்குக் குளிர் காய்ச்சல் வந்தது நினைவிருக்கிறதா? என்ன விஷயம்? நாங்கள் ஆச்சரியப்பட்டோம்: 'எங்கள் போதகர் ஒரு வலையில் சிக்கிவிட்டாரா? இப்போது அவர் அந்த ஸ்திரீயிடம் உனக்கு ஒரு புருஷன் இருக்கிறான் என்று சொல்கிறார், அவளோ, "எனக்குப் புருஷன் இல்லை" என்று சொல்கிறாள்.' 118 "நாம் எப்படி நினைத்தோம் என்று நினைவிருக்கிறதா? பிறகு அவர் என்ன...? அவர் எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியாக, 'நீ சொல்வது சரிதான், ஏனென்றால் உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள், இப்போது நீ வாழ்கிறவன் உன் புருஷன் இல்லை' என்றார். காட்சி உடனடியாக மாறியது. 119 "இந்த ஸ்திரீ அவரிடம் என்ன சொன்னாள்? 'ஐயா, நான் ஒரு சமாரிய ஸ்திரீ. நான் பாவத்தில் வாழலாம்,' இதைப் போன்று ஒரு சிறிய காரியத்தைச் செய்து, 'ஆனால் எனக்கு வேதவாக்கியங்கள் தெரியும், பைபிளைக் கற்பித்த ஒரு குடும்பத்திலிருந்து நான் வருகிறேன். நான்... நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். எனக்குத் தெரியும், எங்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது, ஒரு மேசியா வருகிறார் என்று முழு சமாரியாவுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது, அவரு டைய பெய-... அவர் கிறிஸ்துவாக இருப்பார்,'" என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அர்த்தம், "'அவர் வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குச் சொல்வார், அது மேசியாவின் அடையாளமாக இருக்கும். நீர் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.' 120 "இயேசு, 'நானே அவர்' என்றார்." அவரைத் தவிர வேறு எந்த மனிதனாலும் அப்படிச் சொல்ல முடியாது, அது சரிதான், அல்லது ஒருபோதும் சொல்ல முடியாது. "'நானே அவர்.'" 121 "அவள் தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே ஓடி, 'வாருங்கள், ஒரு மனிதனைப் பாருங்கள்,' என்று சொல்லி, தெருவிலுள்ள மனிதர்களிடம், 'வாருங்கள், நான் செய்ததை எல்லாம் எனக்குச் சொன்ன ஒரு மனிதனைப் பாருங்கள். இவர் மெய்யாகவே கிறிஸ்துதானோ?' என்றாள்." 122 அது நேற்று மேசியாவின் அடையாளமாக இருந்திருந்தால், மேலும் அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்றால், இன்றும் அது அதேபோலத்தான் இருக்க வேண்டும், அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். 123 "ஆம், அந்தப் பெண் அதை எப்படிச் சொன்னாள் என்பதை, நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம்." 124 அதற்குமுன் அவர்கள் ஒருபோதும் சந்தித்திருக்காத நிலையில், அவர் அந்தப் பெண்ணுடன் பேசியபோது, "போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா," என்று சொன்னதை அந்தப் பெண் நகரத்திலுள்ள மக்களிடம் சொன்னதால், அந்த நகரத்து மக்கள் அனைவரும் அவரை மேசியா என்று விசுவாசித்தார்கள் என்று பைபிள் எப்படிச் சொல்கிறது என்பதைப் பாருங்கள். 125 அதற்கு அவள், "'எனக்குக் கணவன் இல்லை' என்றாள். அவர், 'உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்' என்றார். நான் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தேன் என்பது உங்கள் ஆண்களுக்குத் தெரியும், அவர் என் இருதயத்தின் ரகசியத்தை அறிந்திருந்ததால், அவரே மேசியா என்பதை அது எனக்கு உறுதிப்படுத்தியது." 126 இப்போது கவனியுங்கள், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்" என்று பைபிள் சொல்ல வில்லையா? 127 இப்போது, பைபிள் வாசிக்கிற உங்களுக்கு: எபிரெயருக்கு எழுதின நிருபம் 4-ம் அதிகாரம், "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பின் மஜ்ஜைவரைக்கும் உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகை யறுக்கிறதாயும் இருக்கிறது" என்று நமக்குச் சொல்லவில்லையா? 128 வார்த்தை, மற்றும் அந்த ஜீவனுள்ள வார்த்தையாகிய கிறிஸ்து, நமது நடுவில் வரும்போது, அது-அது இன்னும் இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாக இல்லையா? ஜீவனுள்ள வார்த்தை, கிறிஸ்து, ஜீவனுள்ள வார்த்தை, அவரே அந்த வார்த்தை யாயிருக்கிறார், அவரே ஜீவனுள்ள வார்த்தை, இது எழுத்து வார்த்தை, அந்த எழுத்து வார்த்தை ஜீவனுள்ள வார்த்தையோடு இணைக்கப் படும்போது, அது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிட கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 129 இயேசு தமது கூட்டத்தாரைப் பார்த்து அவர்களின் நினைவுகளை அறிந்துகொண்டார். அவர்களில் சிலர் அருகில் நின்று, "இவன் ஒரு குறிசொல்லுகிறவன். இவன் பெயல்செபூல், ஒரு பிசாசு," என்றார்கள். 130 அதற்கு இயேசு, தேவனுடைய ஆவியானவரை ஒரு தீய காரியம் என்றும், ஒரு தீய செயல் என்றும் அழைத்ததற்காக, "அதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன்," என்றார், "அதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன், ஆனால் ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் வரப்போகிறார், அவருக்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தை பேசினாலும், அது இம்மை யிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிக்கப் படுவதில்லை." 131 அப்படியானால் என்ன-பரிசுத்த ஆவியானவரைத் தூஷிப்பது என்றால் என்ன? புரிகிறதா? தேவனுடைய ஆவியானவரை ஒரு அசுத்தமான காரியம் என்று அழைப்பதே தூஷணம், அதுதான் தூஷணம். [ஒலி நாடாவில் காலயிடம்]...தேவனுடைய ஆவியானவரை ஒரு தீய ஆவி என்று அழைத்தார்கள். [ஒலி நாடாவில் காலயிடம்] 132 எனவே, நீங்கள் பாருங்கள், மக்கள் சத்தமிட்டு, அந்நிய பாஷைகளில் பேசி, இன்னும் பலவற்றைச் செய்தபோது, இந்த தேசம் அவர்களைத் தொடர்ந்து ஒரு கூட்டப் பரிசுத்த-உருளிகள் (holy-rollers) என்றும், வேதப்புரட்டர்கள் என்றும், வேறு பலவாறாகவும் அழைத்ததைப் பார்க்கும்போது, இந்த தேசம் ஏன் நியாயத்தீர்ப்புக்குத் தயாராக இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா? 133 இப்போது, வேதம் சொல்கிறது, பெந்தெகோஸ்தே மக்களாகிய உங்களுக்குச் சொல்கிறேன், வேதம் சொல்கிறது, "உங்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசும் வரம் இருந்து, அப்போது கல்லாதவர்கள் உள்ளே வந்து, முதலாவதாக நீங்கள் அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசுவதைக் கண்டால், அவர்கள், 'நீங்கள் அனைவரும் பைத்தியம் பிடித்தவர்கள்,' என்று சொல்வார்கள். ஆனால் உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்து, அவன் இருதயத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தினால், அவர்கள் முகங்குப்புற விழுந்து, 'மெய்யாகவே தேவன் உங்களுக்குள்ளே இருக்கிறார்,' என்று சொல்வார்கள்." 134 சரி, அந்நிய பாஷைகளில் பேசுவதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்றால், அதன் அடுத்தகட்ட வளர்ச்சி என்னவென்று உங்க ளுக்குத் தெரியாதா? இதைவிட மேலான ஆசீர்வாதம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியானவரை நீங்கள் காணவில்லையா? உங்களை அந்நிய பாஷைகளில் பேச வைப்பது எது? நீங்களாகவே அதைச் செய்கிறீர்களா? இல்லை, ஐயா. நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால் பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்கிறார். அது சரியா? பரிசுத்த ஆவியானவரே செய்கிறார். சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசி களையும், போதகர்களையும், மேய்ப்பர் களையும், சுவிசேஷகர்களையும் ஏற்படுத்தின அதே காரியம்தான் இது. இது பரிசுத்த ஆவியானவர், ஜீவனுள்ள கிறிஸ்து, அவர் மரித்தவரல்ல, சதாகாலங்களிலும் உயிரோடி ருக்கிறவர். 135 அது இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட அதன் புகைப்படம் அவர்களிடம் கீழே இருக்கிறது. சமீபத்தில் கலிபோர்னியாவில் இங்கு எடுக்கப்பட்டது. ஜார்ஜ் ஜே. லேசி, FBI அதை ஆய்வு செய்தார்கள், மற்றும் பல விஷயங்கள், நீங்கள் அதைப் பார்த்திருக் கிறீர்கள், அது ஒரு அக்கினி ஸ்தம்பம். ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும், உலகம் முழுவதும் அது எங்கு எடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதே அக்கினி ஸ்தம்பம் எடுக்கப்பட்டுள்ளது. 136 இப்போது, அது என்ன? அது என்றால்... இயேசு கிறிஸ்துவே அந்த அக்கினி ஸ்தம்பமாக இருந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சரி, அவர் அப்படி இருந்தபோது, யோவான் 6-ல், அவர் விசாரிக்கப்பட்டபோது, ஆபிரகாமைப் பற்றி, அவருடைய நாட்களைப் பற்றி அவர் சொன்னார். அவர், "சரி இப்போது," என்று சொல்லி, "நீர் ஆபிரகாமைக் கண்டாய் என்று சொல்கிறீரே, உமக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே?" என்றார்கள். அதற்கு அவர், "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னே நான் இருக்கிறேன்," என்றார். 137 அப்படியானால் அவர் அந்த அக்கினி ஸ்தம்பமாக, உடன்படிக்கையின் தூதனாக இருந்தார். வேறு வார்த்தைகளில் சொல்வ தென்றால், தேவனிடத்திலிருந்து புறப்பட்ட அந்த வார்த்தையே (Logos), இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தின் வழியாய் வழிநடத்திய அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. மேலும் அந்த அக்கினி ஸ்தம்பம், அந்த வார்த்தையானது மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணியது. மேலும் அவர், "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்கே போகிறேன்," என்றார். 138 அவருடைய மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, சவுலை, தமஸ்குவுக்குப் போகும் வழியில் அவர் சந்தித்து, ஒரு ஒளியினால் அவனைக் கீழே தள்ளினார். மற்றவர்கள் யாரும் அதைக் காணவில்லை, ஆனால் சவுல் அதைக் கண்டான். [ஒலி நாடாவில் காலயிடம்]...?... வனாந்தரத்திலிருந்து வந்து, இஸ்ரவேல் மக்களை அழைத்துக்கொண்டு வந்து, பின்னர் ஒரு மனிதருக்குள் வாசம்பண்ணி, சரீரப் பிரகாரமாகத் தேவத்துவத்தின் பரிபூரணமாக இருந்து, மேசியாவாக இந்த வகையான அடையாளங்களைச் செய்தார். 139 அதே அக்கினி ஸ்தம்பம், அதே இயேசு, அதே ஆவியானவர் உலகம் முழுவதுமுள்ள தமது சபைக்குள் மீண்டும் வரும்போது, அவர் அதே காரியத்தைச் செய்யமாட்டாரா? "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை அவனும் செய்வான். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது," என்று அவர் சொன்னார், "ஆனாலும், நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான், உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடுகூட, உங்களுக்குள் ளேயும் இருப்பேன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவ ராயிருக்கிறார்." 140 நண்பர்களே, நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? பைபிளில் அந்த வாக்குத்தத்தத்தை அளித்த அதே இயேசு, இப்போதே உங்களுடன், இங்கேயே இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதே ஆகும். 141 இப்போது, நீங்கள் அவரிடம் நடந்து சென்று, அவர் எனக்குக் கொடுத்த இந்த உடையை அவர் அணிந்திருந்தால், அவர் சொல்லுவார்... நீங்கள், "இயேசுவே, என்னைச் சுகமாக்குவீர்களா?" என்று கேட்பீர்கள். 142 அவர் உங்களிடம் என்ன சொல்வார் தெரியுமா? "என் பிள்ளையே, நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்." அவரால் அதை மீண்டும் செய்ய முடியாது. அடகுக் கடையிலிருந்து நீங்கள் மீட்கப்பட்டுவிட்டால், இரண்டாவது முறையாக உங்களை எப்படி மீட்க முடியும்? அவர் உங்களை வெளியே கொண்டுவந்துவிட்டார், "அவர் உங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவரு டைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்." நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? உங்கள் சுகமளித்தல் ஏற்கனவே முடிந்துவிட்டது, உங்கள் இரட்சிப்பு முடிந்துவிட்டது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்வது மட்டுமே. 143 யார் உங்கள்மேல் கைகளை வைக்கிறார்கள், இதைச் செய்கிறார்கள், அல்லது அதைச் செய்கிறார்கள் என்பதெல்லாம் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? நீங்கள் எங்கு இருந்தாலும், அதை விசுவாசியுங்கள், அவ்வளவுதான், அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் அதை உங்களுக்குக் கொடுக்க வேண்டும். அதனால்தான் நான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. அமெரிக்க மக்களுக்கு பழைய யூத வழக்கமான கைகளை வைக்கும் முறை கற்பிக்கப்பட்டுள்ளது, அது சரிதான், ஆனால் அது புறஜாதிகளின் முறை அல்ல. 144 "சரி," என்றான் ஒரு யூதனாகிய யவீரு, "வந்து, உமது கைகளை என் மகளின் மேல் வையும், அப்பொழுது அவள் பிழைப்பாள்." 145 ஆனால் ரோமானியன் சொன்னான், "நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்." புரிகிறதா? அவன் சொன்னான், "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவன், நான் இந்த மனுஷனைப் பார்த்து, 'வா' என்றால், அவன் வருகிறான்; மற்றொருவனைப் பார்த்து, 'போ' என்றால், அவன் போகிறான்." அவன் ஒரு நூற்றுக்கதிபதி என்பதை, செஞ்சுரி ஆஃப் மேன், அதாவது "நூறு", அந்த நூறு ஆட்கள் அவனுக்குக் கீழ் இருந்தார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான், அவன் என்ன சொன்னானோ, அதை அவர்கள் செய்ய வேண்டும். அவன் இயேசு கிறிஸ்துவிடம் எதை உணர்ந்தான்? எல்லா வியாதிகளும் நோய்களும் அவருக்குக் கீழ், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது என்பதை. "ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்." ஆமென். அதோ பாருங்கள், கைகளை வைக்க வேண்டிய அவசியமில்லை. 146 இயேசு என்ன சொன்னார்? அவர் திரும்பிப் பார்த்து, "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காண வில்லை," என்றார். சரி, அந்த வகையான விசுவாசத்தைத்தான் நாங்கள் இங்கே கலிபோர்னியாவில் விரும்புகிறோம், அந்த வகையான விசுவாசம், "ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்." அது மட்டுமே தேவை. 147 "ஆகா, தேவனுக்கு மகிமை, சகோதரர் இன்னார் என்மீது கைகளை வைத்தார், எனக்குள் ஏதோ ஒன்று செல்வதை நான் உணர்ந்தேன்" என்று யாராவது ஒரு மனுஷன் சொல்வதைப் போல அல்ல. அவர் உங்கள் மீது கைகளை வைத்ததை நீங்கள் உணர்ந்திருக்கலாம், ஆனால் நீங்கள் எதையும் உணரவில்லை. புரிகிறதா? "நீங்கள் அதை உணர்ந்தீர்களா?" என்று இயேசு ஒருபோதும் கேட்கவில்லை. அவர், "நீங்கள் அதை விசுவாசித்தீர்களா?" என்றே கேட்டார். அதுதான். "நீங்கள் அதை விசுவாசித்தால்." இது ஒரு முடி-... இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட காரியம் அல்ல, இது ஒரு விசுவாசம் சம்பந்தப்பட்ட காரியம், "விசுவாசிக்கிறவன்," நீங்கள் இருக்கும் இடத்திலேயே. 148 நீங்கள் எதையும் உணர மாட்டீர்கள் என்று நான் சொல்லவில்லை, எனக்கும் சில விசித்திரமான உணர்வுகள் ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன், ஆனால் ஒருபோதும் நான் என் விசுவாசத்தை ஒரு உணர்வின் மீது வைக்கவில்லை. ஒரு உணர்ச்சியின் மீது என் உபதேசத்தை என்னால் கட்ட முடியாது, நான் அதை 'கர்த்தர் உரைக்கிறதாவது' (THUS SAITH THE LORD) என்பதன் மீது, தேவனுடைய வார்த்தையின் மீது கட்ட வேண்டும். அதனால்தான், இன்றிரவு... மேலும் அது அந்த வார்த்தையின் மீது கட்டப்பட்டிருந்தால், அந்த வார்த்தையை வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு அதில் விசுவாசம் இருந்தால்... இயேசு மரித்து, தமது சபையைப் பரிசுத்தப்படுத்தும்படி தமது ஜீவனைக் கொடுத்தார், அதனால் அவர் உலகம் முழுவதும், எல்லா நேரங்களிலும் தமது சபையில் இருக்க முடியும், இந்த பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். 149 இயேசு தேவன் மாம்சமானவராக இருந்தபோது, தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் இருந்தது, அவர் ஆவியானவரை அளவின்றி பெற்றிருந்தார்; நாம் அதை அளவுடன் பெற்றிருக்கிறோம். இப்போது, நீங்கள் வெளியே சென்று கடலில் இருந்து ஒரு ஸ்பூன் தண்ணீரைக் எடுத்தால் எப்படி இருக்கும்? சரி, அதுதான்-அதைத்தான் இயேசு கொண்டிருந்தார், முழு கடலையும், ஆனால் உங்களிடமும் என்னிடமும் ஒரு ஸ்பூன் அளவுதான் உள்ளது, அதுதான் வித்தியாசம், நீங்கள் அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள். அவருக்கு நாம் தேவையில்லை, ஆனால் நமக்கு அவர் தேவை. ஆனால் நீங்கள் அந்த ஒரு ஸ்பூன் தண்ணீரை எடுத்து ஆய்வகத்திற்குச் சென்றால், முழு கடலிலும் உள்ள அதே ரசாயனங்கள் அந்த ஒரு ஸ்பூன் தண்ணீரிலும் உள்ளன. 150 பெந்தெகோஸ்தே நாளில், தேவன் பலத்த காற்று வீசுகிறதைப்போல கீழே இறங்கி வந்தபோது, நீங்கள் கவனித்தீர்களா? அவர் ஒரு அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். ஆனால் அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தம்மைப் பிரித்து, தமது மக்களுக்குள்ளே தம்மைப் பகுத்து, அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அமர்ந்ததை நீங்கள் கவனித்தீர்களா? தேவன் தம்மைத் தமது சபைக்குப் பிரித்துக்கொடுக்கிறார். அவர், "என் நாமத்தினாலே எங்கே இரண்டுபேராவது மூன்றுபேராவது கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நான் இருப்பேன். இரண்டுபேர் ஏதாகிலும் ஒரு காரியத்தைக் குறித்துக் கூடிவந்து கேட்டால், நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன்" என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. புரிகிறதா? 151 அது என்ன? இங்கே கொஞ்சம் அக்கினி, அங்கே கொஞ்சம் அக்கினி இருக்கும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், நாம் ஒன்றாக இணையும்போது, அது கிறிஸ்துவின் சரீரம் ஒன்றிணைவதாகும். தேவன் தம்மைப் பிரித்து, எனக்கு ஒரு பகுதியையும், உங்களுக்கு ஒரு பகுதியையும், அடுத்தவருக்கு ஒரு பகுதியையும் கொடுக்கிறார், இதனால் நாம் அனைவரும் வாழ்ந்து, நித்திய ஜீவனைப் பெற முடியும். இப்போது, அந்த நித்திய ஜீவன், நான் சொன்னது போல், ஜோயி (Zoe) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, இதன் பொருள் "தேவனின் சொந்த ஜீவன்." 152 இப்போது, அவர்கள் இதைக் குறித்துச் சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தபோதே, திடீரென்று அந்திரேயா கீழே உட்கார்ந்திருக்க வேண்டும், சாத்தான் அந்த இருண்ட மேகங்களின் வழியாகத் திரும்பிப் பார்த்திருக்க வேண்டும், நான் இப்போது முடிக்கப் போகிறேன், அவர்கள் இயேசு இல்லாமல் செல்வதை அவன் பார்த்தான். அது அவனுக்குத் தேவையான அளவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. 153 இப்போது, என் சகோதரர்களே, என் சகோதரிகளே, விசுவாசத்தில் நேராகப் பார்ப்போம், அவர்கள் இயேசு இல்லாமல் சென்றுவிட்டார்கள், லவோதிக்கேயா சபை காலத்தை உருவாக்க சபைக்கு இப்படித்தான் நேர்ந்தது என்று நான் நம்புகிறேன், சபை இயேசு இல்லாமல் சென்றுவிட்டது. நாம் கட்டுக்கடங்காத ஆவேசங்களுக்குச் சென்று விட்டோம், நாம் ஒரு பெரிய கட்டிடத் திட்டத்தை வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டோம், யார் மிகப்பெரிய சபையைக் கட்ட முடியும் என்று பார்க்க, நாம் கல்வித் திட்டங்களுக்குச் சென்றுவிட்டோம், நாம் ஸ்தாபனத் திட்டங்களுக்குச் சென்றுவிட்டோம், நாம் பலவிதமான திட்டங்களுக்குச் சென்று விட்டோம், நாம் எதை உருவாக்கி யிருக்கிறோம்? நாம் ஒரு கூட்ட ஸ்தாபனப் பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறோம். அது சரிதான். 154 நாம் கட்டுகிறோம்-நாம் நமது-நமது-நமது காரியங்களை நமது ஸ்தாபனத்தின் மீது கட்டுகிறோம்: "அங்கே இருப்பவர்களோடு பழகாதீர்கள், இங்கே இதை வைத்திருக் காதீர்கள், நாமே அந்த ஸ்தாபனம், நம்மிடம் எல்லா சத்தியமும் இருக்கிறது." 155 நினைவில் கொள்ளுங்கள், சகோதரரே, போர்வை எல்லா திசைகளிலும் விரிகிறது, பாருங்கள், அது மற்றவர் மீதும் செல்கிறது. புரிகிறதா? ஆனால் நாம் எல்லைகளை வரைந்து, பாப்டிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள் மற்றும் மற்றவர்கள் செய்ததைப் போலவே நம்மைப் பிரித்துக்கொண்டோம். முன்பு குளிர்ந்த, சம்பிரதாயமான பாப்டிஸ்டுகளைப் பற்றிப் பேசுவார்கள், இப்போது அது குளிர்ந்த, சம்பிரதாயமான பெந்தெகோஸ்தே மக்கள். புரிகிறதா? பாப்டிஸ்டுகள் இப்போது சூடாகி வருகிறார்கள். 156 எப்படி என்று கவனியுங்கள்... இப்போது, அது உண்மைதான். நாம் ஸ்தாபனப் பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறோம், நாம் கல்விப் பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறோம்; நாம் பைபிள் பள்ளிகளை உருவாக்கி யிருக்கிறோம், அது முற்றிலும் சரியானதுதான், ஆனால் அவர்களிடம் நாம் என்ன சொல்ல வேண்டியிருந்தது? "அவர்களுக்கு இளங்கலை பட்டத்தையும், Ph.D.-யையும், மற்றும் LL.D.-யையும் கொடுங்கள்." 157 மேலும் நமது பெரிய ஸ்தாபனங்கள் சிலகூட, ஒரு மிஷனரியை அனுப்புவதற்கு முன்பு, இப்போது ஒரு பெந்தெகோஸ்தே மிஷனரி, அவர் ஒரு பெந்தெகோஸ்தே மிஷனரியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு, அவருடைய IQ (அறிவுத்திறன்) போதுமானதாக இருக்கிறதா என்பதை ஒரு மனநல மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். அது பெந்தெகோஸ்தே என்ற பெயருக்கே ஒரு கறை! பெந்தெகோஸ்தே என்பது ஒரு அமைப்பு அல்ல, பெந்தெகோஸ்தே என்பது மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன் அல்லது வேறு எவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு அனுபவம். 158 அவர் ஒரு மிஷனரியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க யார் இருக்கிறார்கள், பரிசுத்த ஆவியானவரா அல்லது சில உலகளாவிய மனநல மருத்துவர்களா? தேவனே அழைப்புகளைக் கொடுக்கிறார். பேதுருவின் கல்வி அதற்குத் தகுதி பெற்றிருக்காது, அவர் படிப்பறியாதவர் மற்றும் பேதமையுள்ளவர் என்று பைபிள் கூறுகிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர், அவரைச் சபையின் தலையாக்குவது பரிசுத்த ஆவியானவருக்குப் பிரியமாயிருந்தது; அவரும் யோவானும், இருவருமே படிப்பறியாதவர்கள் மற்றும் பேதமையுள்ளவர்கள். ஆனால் நாமோ அங்கேதான் நிற்கிறோம். 159 பிசாசு நாம் இதுபோன்ற ஒரு பெரிய ஆவேசத்திற்குச் செல்வதைப் பார்த்தான், அவன் சொல்கிறான், "இங்கே எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது." அங்கே அவன் செய்த அதே காரியம்தான் இது. எனவே, அவன் மலைகளுக்கு மேலாக எழுந்து, தனது விஷக் காற்றை வீசத் தொடங்கினான், அவன் சொன்னான், "அதோ அவர்கள், அந்த கடலின் நடுவில் ஒதுங்கி நிற்கிறார்கள், அவர்கள் கடந்தகாலத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அவனுக்கு அவர் இல்லை என்பதை நான் பார்க்கிறேன், அவர் இப்போது அவரோடு இல்லை." 160 லவோதிக்கேயா சபை காலத்தைக் கவனியுங்கள், எல்லா சபை காலங்களிலும், கடைசி ஏழு சபை காலங்களில், லவோதிக்கேயாவில், இயேசு தமது சொந்த சபைக்கு வெளியே நின்றுகொண்டு, உள்ளே வர முயற்சி செய்து, கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். [சகோதரர் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டினார்] இப்போது, அந்த நிலைக்குத்தான் நாம் வந்திருக்கிறோம். 161 அப்படியாக சாத்தான் தனது விஷ மூச்சை சுற்றிலும் ஊதிக்கொண்டிருக்கிறான், உங்களுக்குத் தெரியும், அவன் சொல்கிறான், "ஊ! ஊ! அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன, அப்படிப்பட்ட காரியங்கள் எதுவுமில்லை. அந்த மாதிரியான காரியங்களை விசுவாசிக்காதீர்கள், அது மனோவசியம் (mental telepathy). அதுதான் சரி." அவர்கள் வார்த்தையை விட்டு விலகுகிறார்கள். நான்-நான்... நீங்கள் வார்த்தையை ஆராய்ந்து அது சரியா என்று பாருங்கள், பின்பு தேவன் அவருக்கு அந்த வார்த்தையைக் கொடுத்து அதை உறுதிப்படுத்துகிறாரா என்று பாருங்கள், அப்படியானால் அது சரியானது; தேவன் அப்படிச் சொன்னால், அதுவே முடிவானது. 162 இப்போது, "அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன," என்பது சம்பிரதாய மாகிவிட்டது, நமது சபைகளை குறித்தும், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை குறித்தும், நம்மிடமுள்ள பெரிய திட்டங்களை குறித்தும் மட்டுமே பேசுகிறோம். பாருங்கள், அவர் வெளியிலிருந்து பார்த்தார், அந்த சிறிய படகு புயலில் சிக்கி அலைக்கழிக்கப்படத் தொடங்கியது, ஒரு எழுப்புதலுக்கான எல்லா நம்பிக்கைகளும் போய்விட்டதை நாம் காண்கிறோம். 163 இன்றும் ஏறக்குறைய அப்படித்தான், தேவன் ஒரு ஓரல் ராபர்ட்ஸை (Oral Roberts) தேசமெங்கும் அனுப்பினார், ஒரு டாமி ஆஸ்போர்னை (Tommy Osborn) தேசமெங்கும் அனுப்பினார், அவர்-அவர் ஒருவர்பின் ஒருவராக, அலை அலையாக, அலை அலையாக, அலை அலையாக அனுப்பினார், ஆயினும் நாம் இன்னும் எழுப்புதல் இல்லாமல் அமர்ந்திருக்கிறோம். என்ன பிரச்சனை? 164 ஆனால் நினைவில்கொள்ளுங்கள், அவர் வெகுதூரம் சென்றுவிடவில்லை, அவர்கள் விலகிப்போவதை அவர் கண்டபோது, என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார்; அதனால்தான் அவருக்கு இங்கே முன்கூட்டியே தெரிந்திருந்தது, ஆரம்பத்திலேயே முடிவை முன்கூட்டியே அறிவிக்க முடிந்தது. லவோதிக்கேயா சபைக்காலம் அவரை வெளியே தள்ளப்போகிறது என்பதை அவர் அறிந்தி ருந்தார், எனவே அதை சந்திக்க அவர் ஆயத்தம் செய்தார், "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன்," நீங்கள் கதவைத் திறந்து, அவரை உள்ளே வர அனுமதித்தால். 165 மேலும் காற்றடிக்கும்போது, அது எதிரிடையாக இருக்கும்போது, நகர்வது கடினமாக இருப்பதை நாம் காணும்போது, அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள், ஆனால் கலிலேயாவிலேயே மிக உயர்ந்த மலையின் மீது அவர் ஏறியிருந்தார், ஒருவேளை பாலஸ் தீனத்திலேயே மிக உயர்ந்த மலையாக இருக்கலாம், அவர் மலையின் மீது இருந்தார், நீங்கள் எவ்வளவு உயரத்தில் ஏறிச் செல்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியும், அவர் அவர்களைக் கண்காணிப்பதற்காக அங்கே மேலே ஏறினார். அவர்கள் தவிப்பதை அவர் கண்டபோது... அவர்களைக் காணக்கூடிய அளவிற்கு அவர் உயரத்தில் இருந்தார். 166 மேலும் அவர் இங்கே பூமியில் இருந்தபோது, நாம் இந்த நிலைமைக்கு வருவோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார், எனவே அவர் கல்வாரி மலையின் மீது ஏறியது மட்டுமல்லாமல், சந்திரனையும் நட்சத்திரங் களையும் தாண்டிச் சென்று, உன்னதத்திலுள்ள மகத்துவமானவரின் வலதுபாரிசத்தில் உட்காரும் வரைக்கும் மேலே ஏறிச் சென்றார், அவருடைய கண் சிட்டுக்குருவியின் மீதும் இருக்கிறது, இன்று இரவு அவர் இந்தக் கூட்டத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் வெகுதூரம் சென்று விடவில்லை, அவர் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். 167 இந்தச் சிறிய படகு அலைக்கழிக்கப்படும்போது, இங்கே இருக்கும் இந்தப் பையன், அவனுடைய சிறிய படகு, உங்களுடையது, உங்களுடையது, இங்கே வெளியே, சுற்றிலும், உங்களுடைய சிறிய படகு அலைக்கழிக்கப்படும் போது, "என்னால் குணமாக முடியாது என்று டாக்டர் சொல்கிறார்; எனக்கு பக்கவாதம் வந்துவிட்டது; எனக்கு புற்றுநோய் இருக்கிறது; நான் சாகப்போகிறேன்," அவர் அதை அறிவார், ஆனால் அவருடைய கண் சிட்டுக்குருவியின் மீது இருக்கிறது, அவர் உங்களை மீட்டுக்கொண்டார், அவர் கிரயத்தைச் செலுத்தினார், "அவர் உங்கள் மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார்; அவரு டைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்." ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது, அவர் மகிமையின் அரண்களுக்கு ஏறிச் சென்று, உன்னதத்திலுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, உங்களைக் கண்காணித்துக் கொண்டு, உங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசும்படிக்கு உயிரோடிருக்கிறார். 168 அவர் அங்கே நின்றுகொண்டிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது, நம்முடைய பலவீனங்களின் உணர்வினால் தொடப் படக்கூடிய ஒரு பிரதான ஆசாரியராக, பூமியிலிருந்த அதே பிரதான ஆசாரியராக, நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார். நீங்கள் அவரைத் தொட்டால், அவர் பூமியிலிருந்தபோது எப்படி செயல்பட்டாரோ அப்படியே செயல்படுவார், அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார். 169 ஒரு பெண் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், வெளியே சென்று கூட்டத்தில் போய் அமர்ந்துகொண்டாள். அவள் வரிசையில் நிற்கவில்லை, மற்றவர்கள் வரிசையில் நின்றார்கள், அவள் வரிசையில் நிற்கவில்லை, எனவே அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுவிட்டுச் சென்று, கூட்டத்தில் அமர்ந்துகொண்டாள். அவர் திரும்பிப் பார்த்து, "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். அப்போஸ்தலனாகிய பேதுரு அவரைக் கடிந்துகொண்டு, "எல்லாரும் உம்மைத் தொடுகிறார்களே. நீர் ஏன் இப்படிச் சொல்கிறீர்?" என்றார். அவர் சொன்னார், "ஆனால் நான் பெலவீனமடைந்தேன், வல்லமை என்னிலிருந்து புறப்பட்டது," ஒரு தரிசனம். ஏதோ நடந்தது, அது ஒரு குறிப்பிட்ட வகையான தொடுதலாக இருந்தது. 170 இந்தக் காலத்திலுள்ள இந்தத் திட்டங்கள் எதுவும் அவரைத் தொடுவதில்லை, அவரைத் தொடுவதற்கு ஒரு தனிநபரின் இருதயம் தேவை, அது பயமல்ல, அதை விசுவாசிக்கக்கூடிய யாரோ ஒருவர், உங்கள் மூடநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவரை விசுவாசியுங்கள். 171 "யாரோ என்னைத் தொட்டார்கள்," அவர் சொன்னார், "நான் பெலவீனமடைந்தேன், வல்லமை," பெலன், "என்னிலிருந்து புறப்பட்டது." மேலும் அவர் அந்தக் கூட்டத்தாரைச் சுற்றிலும் பார்த்து, அந்தச் சிறிய பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் பார்த்து, அவளுக்கு இருந்த இரத்தப்போக்கைக் குறித்துச் சொல்லி, அவளுடைய "விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். பாருங்கள்? "உன் விசுவாசம் இரட்சித்தது." சோசோ (Sozo), "இரட்சிக்கப்பட்டாய்," சரீரப்பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாகவோ அதே வார்த்தைதான். பாருங்கள்? "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது." 172 இப்போது, அவர் அதே பிரதான ஆசாரியராக இருந்தால், அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராக இருந்தால், நீங்கள் அவரைத் தொட்டால், அவர் எப்படிச் செயல்படுவார்? அவர் அதே நபராக இருந்தால், அவர் அதேபோலவே செயல்படுவார். 173 நான் இன்று இரவு இந்தக் கூட்டத்தாருக்கு சவால் விடுகிறேன், அந்தச் சரித்திரம் உண்மை என்று விசுவாசியுங்கள்: அவர் இன்னும் அதே பிரதான ஆசாரியராக இருக்கிறாரா என்று பாருங்கள், கலிலேயாவில் இருந்தபோது எப்படிச் செயல்பட்டாரோ அதேபோல அவர் இன்று இரவும் செயல்படுகிறாரா என்று பாருங்கள், அவர் அதே காரியத்தைச் செய்கிறாரா என்று பாருங்கள். 174 நாம் சபை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கவில்லை, மணி நேரங்கள் மிகவும் தாமதமாகிவிட்டன, சூரியன் மறைந்துகொண்டிருக்கிறது, யதார்த்தமாக இருக்க வேண்டிய நேரம் இது, ஆணும் பெண்ணும் தங்களுடைய-தங்களுடைய-தங்களுடைய சபை மேலங்கிகளைக் கழற்றி எறிந்துவிட்டு, உங்கள் சபைப் பிரிவுகளின் கந்தல்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேவனை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது, பெந்தெகொஸ்தே சபைக்குள் ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதலைக் கொண்டுவாருங்கள். அவரைத் தொட்டு, அவர் இன்னும் பிரதான ஆசாரியராக இருக்கிறாரா என்று பாருங்கள், நான் அதை உங்களுக்குச் சவாலாக விடுகிறேன், அதை விசுவாசியுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். 175 எனவே அவர்களுடைய கடைசி மணிநேரத்தில், எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போன நிலையில், அவர் தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். என்ன நடந்தது? அவர்கள் அவரைப் பார்த்தவுடனே, அன்று எப்படிச் செய்தார்களோ அதே போலத்தான் இன்றும் செய்கிறார்கள், தங்களுக்கு உதவக்கூடிய ஒரே காரியத்தைப் பார்த்து அவர்கள் பயந்தார்கள், அது பயமுறுத்துவதாக (spooky) நினைத்தார்கள், "அவர் ஒரு ஆவி." 176 இன்றும் அதே காரியம்தான்! நீங்கள் பாப்டிஸ்டுகள், நீங்கள் மெத்தடிஸ்டுகள், நீங்கள் பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், நீங்கள் பெந்தெகொஸ்தே, ஒன்ஸ் (Oneness), த்ரீனஸ் (Threeness), ஃபைவ்னஸ் (Fiveness), அசெம்பிளீஸ், ஃபோர்ஸ்கொயர், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள், ஆனால் பயப்படாதீர்கள், தான் அதைச் செய்வதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் இன்றிரவு பேச முடியுமானால், அவர்கள் அனைவரும் பயந்திருந்தபோது அன்று அவர் சொன்னது போலவே சொல்வார். "சரி," என்றார்கள், "நாங்கள் ஒரு ஆவியைப் பார்க்கிறோம், அது பயமுறுத்துவதாக இருக்கிறது, அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது." அவர் சொன்னார், "பயப்படாதிருங்கள்; நான்தான்," நேற்றும் இன்றும் என்றென் றைக்கும் மாறாதவர். "திடன்கொள்ளுங்கள்; நான்தான்." 177 சபையே, இன்றிரவு, வாழ்க்கையின் பெருங்கடலில் நீங்கள் பயணம் செய்யும்போது அவரை உங்கள் சிறிய படகிற்குள் அனுமதிப்பீர்களா? உங்கள் இருதயத்தைத் திறந்து, "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், நான் சம்மதிக்கிறேன், அது வேதம் என்று எனக்குத் தெரியும், வேதம் என்னவென்று அந்த மனிதர் எனக்குச் சொன்னார், நீர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவர் என்று பைபிள் சொல்கிறது என்பதை நான் அறிவேன்; இந்தக் காரியங்களை நான் அறிவேன்" என்று சொல்வீர்களா? 178 இன்றிரவு இவை அனைத்துக்குள்ளும் செல்ல நமக்கு நேரமில்லை, நாளை இரவு நாம் இதற்குள்ளாக, தொடர்ந்து, தொடர்ந்து சென்றுகொண்டே இருப்போம், பாருங்கள், நண்பர்களே, நீங்கள் விசுவாசித்தது உண்மை தான் என்பதை உங்களுக்குக் காண்பித்து நிரூபித்துக்கொண்டே இருப்போம், ஆனால் நாம் இப்போது பாதையில் இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறோம். 179 கிறிஸ்தவர்களிடம் உள்ள பிரச்சனையே அதுதான். இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானம் சொன்னதை விஞ்ஞானம் இப்போது எடுத்துக்கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி, பூமியைச் சுற்றி ஒரு பந்தைச் சுழலச் செய்து நிரூபித்தார், மேலும் அவர் சொன்னார், "எந்தவொரு நபரும் மணிக்கு முப்பது மைல் என்ற பயங்கர வேகத்தில் சென்றால்," புவியீர்ப்பு விசை உங்களை பூமியிலிருந்து தூக்கி எறிந்துவிடும் என்று விஞ்ஞானரீதியாக நிரூபித்தார். ரிக்கியும் அவனுடைய ஹாட் ராட் (hot rod) காரும் என்னவாயிற்று? அவர்கள் மணிக்கு பல ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றி வருகிறார்கள். அந்த விஞ்ஞானம் என்ன சொன்னது என்று அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள் என்று நினைக்கி றீர்களா? இல்லை. அவர்கள் இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். 180 ஆனால் சபையோ, "இதைக் குறித்து திரு. மூடி (Mr. Moody) என்ன சொன்னார் என்று பார்ப்போம். திரு. வெஸ்லி (Mr. Wesley) என்ன சொன்னார் என்று பார்ப்போம்," என்று சொல்வார்கள். அந்த மனிதர்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தார்கள், அது அந்தக் காலத்திற்குச் சரியாக இருந்தது, ஆனால் நாம் ஏறுவதற்கு ஒரு விஞ்ஞான மரம் மட்டுமல்ல, தேவனுடைய அபரிமிதமான ஆசீர்வாதங்களின் இன்னும் பயன்படுத்தப்படாத வளங்களும் நமக்கு உள்ளன, அவை வரையறுக்கப்பட்டவை அல்ல, ஆனால் எல்லையற்றவை. 181 "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ அதை நான் செய்வேன்." புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுக்குரியது. நீங்கள் இரட்சிக்கப்படும்போது, அடியில் அவருடைய பெயர் எழுதப்பட்ட ஒரு காசோலையை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார், அதை நிரப்புவதற்குப் பயப்படாதீர்கள், ஏனென்றால் அது பெந்தெகொஸ்தே கிளியரிங்ஹவுஸ் வழியாகச் சென்றால் பரலோக வங்கி அதை ஏற்றுக்கொள்ளும். ஆகவே பாருங்கள், அது சரிதான். பாருங்கள், உங்களுக்கென்று அங்கே வைப்புநிதியாக ஏதேனும் இருந்தால், பாருங்கள், நீங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அந்த காசோலை உங்களுக்குத்தான் சொந்தம் என்பதைக் காட்ட உங்களிடம் அடையாளச் சான்று இருந்தால், அது-அது இப்போது விசுவாசிகளுக்கு மட்டுமே உரியது, அந்த அடையாளம் உங்களிடம் இருந்தால், தேவன் உங்கள் காசோலையை ஏற்றுக்கொள்வார். அது சரிதான். நீங்கள் எதைக் கேட்டாலும் சரி, எந்த மீட்பின் ஆசீர்வாதங்களும் உங்களுக்குச் சொந்தமானவையே. 182 இப்போது, நான் உங்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறேன், உங்கள் கால்கள் மரத்துப் போயிருக்கும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் முதியவர்கள், இளையவர்கள், மற்றும் அனைவரும், உள்ளேயும், வெளியேயும், கதவுகளின் அருகிலும் நின்று கொண்டிருக்கிறீர்கள், தேவன் உங்களுக்கு நிறைவாகப் பலனளிப்பாராக. 183 நான் உங்கள் சகோதரன். அங்கு இல்லை... என்னிடம் ஒரு துளி அளவுகூட குணமாக்கும் வல்லமை இல்லை, வேறு யாரிடமும் அது இல்லை, எந்த டாக்டரிடமும் அது இல்லை, எந்த மருந்திலும் அது இல்லை. உங்களைக் குணமாக்கக்கூடிய எந்த மருந்தும் உலகில் இல்லை, சரியான மனநிலையிலுள்ள எந்த டாக்டரும் அப்படி உங்களிடம் சொல்ல மாட்டார்; மேயோ சகோதரர்கள் (Mayo Brothers) குணமாக்கக்கூடிய எந்த மருந்தும் தங்களிடம் இல்லை என்று சொன்னார்கள். 184 ஒருவேளை நான் கத்தியால் என் கையை அறுத்துக்கொண்டால், அந்தக் கத்திக் காயத்தைக் குணமாக்கும் எந்த மருந்தும் உலகில் அவர்களிடம் இல்லை. என் கையில் உள்ள கத்திக் காயத்தைக் குணமாக்கும் எந்த மருந்தும், இந்த மேசையின் மீதோ அல்லது என் கோட்டிலோ அதை குணமாக்கும். நீங்கள் சொல்வீர்கள், "மருந்து உங்கள் மேசைக்காகவோ அல்லது-அல்லது கோட்டிற்காகவோ உருவாக்கப் படவில்லை, அது உங்கள் சரீரத்திற்காக உருவாக்கப்பட்டது." 185 சரி, ஒருவேளை நான் என் கையை அறுத்துக்கொண்டு, கீழே விழுந்து இறந்துபோனால், எனக்கு எம்பாமிங் (embalm) செய்து ஐம்பது வருடங்களுக்கு என்னை இயல்பான நிலையில் இருப்பதுபோலவே செய்து, ஒவ்வொரு நாளும் ஒரு பெனிசிலின் (penicillin) ஊசி போட்டு, எல்லாவிதமான களிம்புகளையும் தடவி, தையல் போட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்தால் என்னவாகும்? இன்றுமுதல் ஐம்பது வருடங்கள் கழித்து, அந்தக் காயம் எப்படி அறுபட்டதோ அப்படியேதான் இருக்கும். அது மனித சரீரத்தைக் குணமாக்குகிறது என்றால், ஏன் அது அதைக் குணமாக்கவில்லை? சரி, நீங்கள் சொல்வீர்கள், "நிச்சயமாக, அதிலிருந்து ஜீவன் பிரிந்து போய்விட்டது." 186 சரி, ஜீவன் என்றால் என்னவென்று எனக்குச் சொல்லுங்கள், தேவன் யார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாருங்கள்? அது சரிதான். அது தேவன். மருந்து திசுக்களை உருவாக்குவதில்லை, திசுக்களை உருவாக்க ஜீவன் தேவை. அது சரிதான். மேலும் தேவனை நோக்கிய உங்கள் மனப்பான்மையே அதைச் செய்கிறது. ஒருவர் என்னிடம் கேட்டார், "கடுமையான சளிக்கு பெனிசிலின் போடுவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?" 187 நான் சொன்னேன், "அது வீடு முழுவதும் எலிகள் இருப்பதற்கும், நீங்கள் எலி மருந்து வைத்து அவைகளைக் கொல்வதற்கும் சமம், அது ஓட்டைகளை அடைக்காது, எலிகளை மட்டுமே கொல்லும்." அது சரிதான். மேலும் அது... அது கிருமிகளைக் கொல்லும், அது உண்மைதான், மருந்து கிருமியைக் கொல்லலாம், ஆனால் கிருமி அழித்த செல்களை அது உருவாக்குவதில்லை, அதைச் செய்ய தேவன் தேவை, அவர் மட்டுமே, "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே." 188 ஒருவேளை உங்கள் கை உடைந்து போய், நீங்கள் ஓடிப்போய், "டாக்டர், என் கையைக் குணமாக்குங்கள், நான் கிராங்க் செய்ய வேண்டும், வெளியே என் காரில் வேலை செய்துகொண்டிருக்கிறேன், நான் அதை முடிக்க வேண்டும்," என்று சொன்னால் என்ன நடக்கும்? உங்களுக்கு மனநல சிகிச்சை தேவை என்று அவர் சொல்வார், அது சரியாகத்தான் இருக்கும். அவர் உங்கள் கையைச் சரிசெய்து வைக்கலாம், ஆனால் தேவன் கால்சியத்தையும், ஜீவப் பொருட்களையும், மற்ற காரியங்களையும் உருவாக்கி அதை ஒன்றாகச் சேர்த்துக் குணமாக்க வேண்டும், அதற்கு தேவன் தேவை. குணமாக்கக்கூடிய எதுவும் நம்மிடம் இல்லை, எந்த மருந்தும் குணமாக்குவதில்லை, தேவனே குணமாக்குகிறார். மேலும் குணமாக்குகிறவரான தேவன் மீதான உங்கள் மனப்பான்மையே... 189 மேலும் ஜீவன் என்பது என்ன என்பதை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜீவன் இருக்கும் சளியை (mucus) நாம் அறிவோம், ஆனால் ஜீவனின் கிருமி (germ) என்னவென்று நமக்குத் தெரியாது, ஏனென்றால் அது ஒரு ஆவி, எந்தக் கண்ணாடியாலும் ஒரு ஆவியைப் பார்க்க முடியாது, அதோ அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே அவரே குணமாக்குகிறவர். 190 இன்றிரவு, நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? இன்றிரவு அவர் இந்தக் கூட்டத்திற்குள் வந்தால், ஒரு சிறிய கூட்டமாக, இங்கே யாரையாவது அழைப்போம், நாங்கள் நேற்றிரவு ஒரு நூறு ஜெப அட்டைகளைக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன், A வரிசையில் என்று நம்புகிறேன். எங்களிடம் அவற்றில் சில உள்ளன, நாங்கள் அவசரப்பட வேண்டியிருந்தது. ஆனால், இன்றிரவு, நாங்கள் சிலரை இங்கே அழைத்து, பரிசுத்த ஆவியானவர் இங்கே மேடையில்... அசைவாடத் தொடங்கினால், அவர் செய்வாரானால், அவர் செய்வார் என்று நான் சொல்லவில்லை. அவர் கூட்டத்திற்குள் சென்று, அந்தக் கூட்டத்திற்குள் அசைவாடத் தொடங்கி, இங்கே ஜெப அட்டைகள் உள்ளவர்களுக்கு அவர் செய்வதுபோலவே, அங்கே ஜெப அட்டைகள் இல்லாத உங்களுக்கும் அவர் அதே காரியத்தைச் செய்வாரானால், நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுப்பாருங்கள், அவர்-அவர் அதே பிரதான ஆசாரியராக இருக்கிறாரா இல்லையா என்று பாருங்கள். நான் இன்றிரவு பேசிய காரியங்கள் நிறைவேறுவதை நீங்கள் பார்த்தால், உங்களில் எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்? கட்டிடம் முழுவதும் உள்ள எல்லாரும் உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்போது உங்கள் தலைகளை வணங்குங்கள். 191 எங்கள் பரலோகப் பிதாவே, எந்தவொரு மனிதனும் செல்லக்கூடிய தூரம் இதுதான், அதாவது வார்த்தையை விளக்குவது. இப்போது, விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வார்த்தையினாலே வரும். இங்கே மக்கள் கட்டில்களிலும், ஸ்ட்ரெச்சர் களிலும், சக்கர நாற்காலிகளிலும் கிடக்கிறார்கள், இதய நோயாலும், புற்றுநோயாலும் மரித்துக் கொண்டிருப்பவர்கள் அங்கே வெளியே இருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் எல்லா விதமான நோய்களும் இங்கே இருக்கின்றன. 192 பிதாவாகிய தேவனே, அவிசுவாசிகள் அருகில் அமர்ந்திருக்கலாம், மனந்திரும் பாதவர்கள் அருகில் அமர்ந்திருக்கலாம், அப்படி இருந்தால், பிதாவே, நீர்-நீர் எங்கள் மத்தியில் வாக்குத்தத்தங்களை அளித்த தேவன் என்பதை நிரூபிக்கும்படிக்கு உம்முடைய பிரசன்னம் அசைவாடுவதை அவர்கள் பார்த்தால், நிச்சயமாக, நீர் அவ்வளவு காரியத்தைச் செய்தால், நீர் எங்கள் மீறுதல்களினிமித்தம் மரித்தீர், உம்முடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம் என்ற மீட்பின் சரித்திரத்தை நாங்கள் விசுவாசிப்போம். அதை அருளுவீராக, ஆண்டவரே. 193 என்னையும், இந்தக் கூட்டத்தாரையும், எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். மேலும், பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தைக்காக நான் உம்மை நேசிக்கிறேன். கவனமுடன் செவி கொடுத்த இந்த அருமையான மக்கள் கூட்டத்தை நான் நேசிக்கிறேன், அவர்கள் கால்கள் மரத்துப்போய், விறைத்து வலியுடன் நின்றிருக்கிறார்கள். ஆனால், ஆண்டவரே, தயவுசெய்து எனக்குச் செவிகொடுப்பீராக. இந்தக் கூட்டத்தார் இன்று இரவு இந்தப் பொருட்காட்சி மைதானத்தை (fairgrounds) விட்டு வெளியேறி, தங்கள் வீடுகளுக்குத் திரும்பச் செல்லும்போது... 194 ஆண்டவரே, நீர் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம்பண்ணப்பட்ட ஒரு நாள் கழித்து, எல்லாம் முடிந்துவிட்டது, நீர் மரித்து அடக்கம்பண்ணப்பட்டீர், அவ்வளவுதான் என்று அவர்கள் நினைத்தார்கள், இரண்டு மனிதர்கள், கிளெயோப்பாவும் அவனுடைய நண்பனும் எம்மாவுவுக்குச் செல்லும் வழியில் இருந்தார்கள், யாரோ ஒருவர் நாள் முழுவதும் அவர்களுடன் நடந்து வந்து, தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவர்களுடன் பேசினார். அது யார் என்று அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவர் அன்று இரவு அவர்களை அடைந்தபோது, அவர் அவர்களைக் கட்டிடத்திற்குள் கொண்டுவந்து கதவை மூடினார், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு முன்பாகச் செய்தது போலவே ஏதோவொன்றைச் செய்தார், அவர்கள் அதை அடையாளம் கண்டுகொண்டார்கள், ஏனென்றால் வேறு யாரும் அதை அப்படிச் செய்யவில்லை, அது அவர்தான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பின்பு சட்டென்று அவர் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து, திரைக்குப் பின்னால், எங்கேயோ சென்றுவிட்டார். இலேசான கால்களுடனும், இலேசான இருதயத்துடனும் மற்ற சீஷர்களிடம் ஓடிச் சென்று, "மெய்யாகவே கர்த்தர் உயிர்த்தெழுந்தார்" என்று சொன்னார்கள். 195 ஆண்டவரே, இன்றிரவு, நீர் அதே காரியத்தைச் செய்வீரா? நீர் எங்கள் மத்தியில் வந்து, நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எப்படிச் செய்தீரோ அதேபோலவே செயல்பட்டுச் செய்வீரா, அப்பொழுது இந்தக் கூட்டத்தார், நீர் அவர்களுடைய தேவனும் அவர்களுடைய இரட்சகருமாய் இருக்கிறீர் என்றும், அவர்களுக்கு உணவளித்து அவர்களை ஆசீர்வதித்தவர் நீர்தான் என்றும் அறிந்து கொள்வார்கள் அல்லவா? 196 மேலும் நீர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்ததைப் போலவே ஏதோவொன்றைச் செய்தால், நீர் மரித்தவர் அல்ல, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளட்டும், வேதம் உம்மைக் குறித்து, "நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவர்" என்று சொல்வதுபோல. நீர் அப்படிச் செய்வீரானால், ஆண்டவரே, நாங்கள் அனைவரும் அவர்களைப் போலவே, "வழியிலே அவர் நம்முடனே பேசி... நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" என்று சொல்லிக்கொண்டே வீடு திரும்புவோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 197 இவ்வளவு பொறுமையாக நின்றுகொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாரோடு, நிச்சயமாக தேவன் இன்றிரவு நமக்கு உதவுவார். [ஒரு சகோதரன் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] (ஆம்.) [வாகனத்தை நகர்த்தும்படி அந்தச் சகோதரன் கேட்கிறார்.] 198 நன்றி, ஆம், சகோதரனே. சரி. அது நல்லது. நீங்கள் தயவுசெய்து அப்படிச் செய்தால். யாரோ இப்போது செல்வதை நான் பார்க்கிறேன், எனவே அந்தச் சகோதரர் எந்தப் பிரச்சினையுமில்லாமல் வெளியே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன். நன்றி. 199 இன்றிரவு நான் உங்களை வெகுநேரம் காக்கவைத்துவிட்டேன், ஆனால் நான்-நான் முயற்சிப்பது... பாருங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமலேயே உள்ளே குதித்தால், அதனால் என்ன பயன்? புரிகிறதா? ஆனால் நீங்கள், நான்-நான் உங்களை ஒரு நிலைமைக்குக் கொண்டுவர விரும்புகிறேன், அங்கு நீங்கள் இது வேதம் என்பதையும், இது வேதத்தின் நிறைவேறுதல் என்பதையும் பார்க்க முடியும். இப்போது, நேற்றிரவு நாம் எடுத்துக்கொண்ட தலைப்பில், அவர் எங்கேயிருந்தார், இந்த கடைசி நாட்களில் விசுவாசிகளின் சரீரத்தில் மேசியா தோன்றி, அவர் அன்று செய்த அதே காரியங்களைச் செய்வார் என்பதைப் பார்த்தோம். 200 இப்போது, நான் நம்புகிறேன் நாம்... எங்கே...? நேற்றிரவு நாம் ஒன்றாம் எண்ணிலிருந்து ஆரம்பித்தோம், ஒரு கூட்டத்தை அழைத்தோம் அல்லவா? ஒன்றாம் எண்ணிலிருந்து சிலரை மட்டுமே அழைத்தோம். அவர்களை இங்கே மேலே கொண்டுவரும் வரைக்கும் நாம் அவர்களுக்குள்ளிருந்தே அழைப்போம். 201 இன்றிரவு, நாம் வேறெங்கிருந்தாவது ஆரம்பிப்போம். ஒவ்வொரு முறையும் நாங்கள் உங்களிடம் சொன்னோம்... நாங்கள் ஒவ்வொரு இரவும் எங்கிருந்தாவது ஆரம்பிப்போம், அதே அட்டைகளிலிருந்து, ஒவ்வொரு இரவும் எங்கிருந்தாவது ஆரம்பிப்போம் என்று நான் போதக சகோதரர்களிடம் சொன்னேன். 202 நாம் ஆரம்பிப்போம், எண்பதிலிருந்து என்று வைத்துக்கொள்வோம். அது எண்பதாக இருக்கட்டும், நாம் முடியுமா என்று பார்ப்போம்... இங்கே எத்தனை பேரை நாம் நிற்க வைக்க முடியும்? நாம் சுமார் பதினைந்து அல்லது இருபது பேரை நிற்க வைக்கலாம், ஒருவேளை. எண்பதாம் எண் ஜெப அட்டை யாரிடம் இருக்கிறது? உங்கள் கையை உயர்த்துங்கள். ஜெப அட்டை... [ஒலி நாடாவில் காலயிடம்]... மேலும் இயேசு உங்களைக் குணமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் கையை உயர்த்துங்கள், ஜெப அட்டை இல்லாத அனைவரும். 203 சரி. இப்போது, அவர்கள்... வரவேற்பாளர்கள் அவர்களை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது, இப்போது என்னு டைய... ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், அந்த ஜெப அட்டைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்கு முன்பு கூட்டத்தில் இருந்தவர்களில், இது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நிச்சயமாக, அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஒன்றுமே இல்லை. 204 இப்போது, ஜெப அட்டை இல்லாமல் அங்கே அமர்ந்திருக்கும் நீங்கள், வெறுமனே ஜெபித்து, "சகோதரர் பிரான்ஹமுக்கு, என்னை அறியாது. ஆண்டவரே, எங்கள் பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக நீர் இருக்கிறீர் என்று சற்று நேரத்திற்கு முன்பு அவர் என்னிடம் சொன்னார். இப்போது, நான் உம்மைத் தொடப் போகிறேன், சகோதரர் பிரான்ஹம் அங்கே நிற்பதை நான் மறந்துவிடுகிறேன், ஆனால் நான் உம்மைத் தொடப் போகிறேன். என் விசுவாசம் உம்மை நோக்குகிறது, ஆண்டவரே, நான் உம்மைத் தொட விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். 205 இப்போது, அதைக் குறித்து வெறித்தனமாகப் பதற்றப்பட வேண்டாம், எதுவும் நடக்காது. அமைதியாக, சாதாரண விசுவாசத்துடன், "ஆண்டவரே, நான் உம்மைத் தொட அனுமதிக்கும்" என்று சொல்லுங்கள். அதன் பிறகு, "நான் உம்மைத் தொட்டேன் என்பதை... நான் எப்படி அறிந்துகொள்வேன்? ஒரு பெண் உமது குமாரனாகிய இயேசுவின் மூலமாக உம்மைத் தொட்டபோது நீர் செய்தது போலவே, சகோதரர் பிரான்ஹமைத் திரும்பிப் பார்த்து என்னிடம் சொல்ல வையும். சகோதரர் பிரான்ஹமும் அங்குள்ள அந்தப் போதகர்களும் உம்மால் சுவீகரிக்கப்பட்ட குமாரர்கள்," பாருங்கள், "ஆனால் அவர் (இயேசு) பிரதான ஆசாரியராகப் பரிந்துபேசுவதற்காக அங்கே மேலே இருக்கும்போது, இவர்கள் குமாரனின் இடத்தை எடுக்கிறார்கள்" என்று சொல்லுங்கள். 206 அவர் நம்முடைய மூத்த சகோதரர். அது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக. மேலும் நாமும்-அவரால் சுவீகரிக்கப்பட்டதன் மூலம் நாமும் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். 207 இப்போது, அனைவரும் சில நிமிடங்களுக்கு நகர வேண்டாம், சில நிமிடங்களுக்கு மிகவும் அமைதியாக இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 208 சரி. இப்போது, இந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் எனக்கு அறிமுகமில் லாதவர்களாக இருக்கிறீர்கள், உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும்? உங்கள் கையை உயர்த்துங்கள். முழு கூட்டத்தினரும். இந்தக் கட்டடத்தில் நான் அறிந்த ஒருவரைக் கூட என்னால் காண முடியவில்லை, என்... சற்று முன்பு ஜார்ஜியாவிலிருந்து வந்த என் நண்பர் வெல்ச் எவன்ஸை இங்கே பார்த்தேன், அவர் இங்கே பின்பக்கம் அமர்ந்திருக்கிறார், வெகு தொலைவில் பின்புறம், அவ்வளவுதான். அவரும் அவரது மனைவியும், மற்றும் சகோதரர் ஃப்ரெட் சோத்மேனும், மற்றும், ஜெஃபர்சன் வில்லியில் உள்ள என் சபையின் அறங்காவலர்களில் ஒருவரும் இங்கே எங்கோ பின்புறம் அமர்ந்திருக்கிறார், அவருக்குப் பக்கத்தில் சகோதரர் சிம்ப்சனும் சகோதரி சிம்ப்சனும் அமர்ந்திருக்கிறார்கள். சகோதரர் போர்டர்ஸ், சகோதரர் ஜீன் கோட் ஆகியோருக்குப் புறம்பாக, இந்தக் கட்டடத்தில் நான் அறிந்த நபர்கள் இவர்கள் மட்டும்தான், இங்கே, அப்புறம், என் மகன் இங்கே இருந்தான், ஆனால் இப்போது அவன் இங்கே இல்லை. ஆனால் அவ்வளவுதான் எனக்குத் தெரியும், பாருங்கள். 209 இப்போது, இப்போது, நான் உங்களை அறியவில்லை என்றால்... நான் இப்போது உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நாம் அவசரப்படாமல் மெதுவாகச் செல்கிறோம், ஏனென்றால் நீங்கள் எப்போதாவது இங்கு உள்ளே வர விரும்பினால், ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. 210 இப்போது, இயேசு நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருந்தாரானால், இருக்கிறார் என்றால், வேதாகமம் அப்படிச் சொல்லுகிறதா? "ஆமென்" என்று சொல்லுங்கள். [சபையார், "ஆமென்" என்கிறார்கள்] சரி. இப்போது, அவர் ஏற்கனவே உங்களை வியாதியிலிருந்தும்-மற்றும் மரணத்தி லிருந்தும் மீட்டுவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? "ஆமென்" என்று சொல்லுங்கள். ["ஆமென்."] நல்லது, அவரால் உங்களை மீண்டும் மீட்க முடியாது, அல்லவா? 211 இப்போது, அவரே இங்கே நின்றிருந் தாலும், அவர் உங்களிலும் என்னிலும் வாசம் செய்வதன் மூலம் செய்யக்கூடியதை விட, இதைப் பற்றி அவரால் மேலதிகமாக ஒரு காரியத்தையும் செய்துவிட முடியாது. "என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அனுப்பி னவரை ஏற்றுக்கொள்ளுகிறான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்." அது சரிதானே? "என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அனுப்பின வரை ஏற்றுக்கொள்ளுகிறான்." 212 இப்போது, நீங்கள் பரிசுத்த ஆவியானவரை, அதனுடைய செய்தியை ஏற்றுக்கொண்டால்... இப்போது, நான் உங்களுக்கு வேதாகமத்தை மேற்கோள் காட்டியிருக்கிறேன். பாருங்கள்? அவர் என்ன செய்தார், மற்றும் ஒரு சிறிய நாடக வடிவில் அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார் என்பதை உங்களிடம் சொல்கிறேன், அப்பொழுதுதான் சிறு பிள்ளைகள்... இங்கே அமர்ந்திருக்கும் இந்தச் சிறு பிள்ளை, மற்றும் அங்கே பலரும், அங்கு அமர்ந்து கட்டைவிரலைச் சூப்பிக் கொண்டிருக்கும் சிறு குழந்தையும், நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன், என் இதயம் அவனுக்காக ஏங்குகிறது, மேலும் எல்லாமே நான்... 213 இப்போது, இப்போது, வேதாகமத்தை உருவாக்கிய, வேதாகமத்தை எழுதிய இந்தத் தேவன் என்றால்... தேவன் ஏவினார் என்று நீங்கள் நம்புகிறீர்களா... வேதாகமம் தேவனுடைய ஏவுதலால் அருளப்பட்ட வார்த்தை என்பதை? நீங்கள் அதை நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புகிறீர்களா? சரி, அது தேவனுடைய ஏவுதலால் அருளப்பட்ட வார்த்தை. அப்படியானால், அது தேவனுடைய ஏவுதலால் அருளப்பட்ட வார்த்தை என்றால், இந்த வார்த்தையை உயிர் பெறச் செய்யவும், அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்கவும் தேவனுடைய ஏவுதல் இங்கே நம்மோடு இருந்தால், நிச்சயமாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள முடியும். அது சரிதானே? 214 இப்போது, இப்போது, இந்த ஜெப வரிசையில் இருக்கும் நீங்களில், எனக்கு அறிமுகமில்லாத, உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத ஒவ்வொருவரும் உங்கள் கையை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? இப்போது, எல்லாம் புதிதாக இருக்கிறது, அனைவரும் அறிமுகமில்லாதவர்கள். 215 இப்போது நினைவில் கொள்ளுங்கள், நான் ஒரு குணமாக்குபவன் அல்ல, வேறு எந்த மனிதனும் குணமாக்குபவன் அல்ல, தேவனே குணமாக்குபவர், அதுவே உண்மை. இப்போது, நான் சொன்னது போல், அவர் எனக்குக் கொடுத்த இந்த உடையை அணிந்துகொண்டு, இன்றிரவு இயேசு இப்போது இங்கே நின்றால், அவர் தம்மை வெளிப்படுத்த விரும்பினால், அது அவர்தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? அவர் இங்கே பூமியில் இருந்தபோது எப்படிச் செயல்பட்டாரோ, அதே முறையில்தான் அவர் செயல்படுவார். அது சரிதானே? அவர் அதே காரியத்தைச் செய்வார், அப்போது அவர் மேசியா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 216 இப்போது, நான் மேசியா அல்ல, வேறு எந்த மனிதனும் மேசியா அல்ல, அவரே மேசியா, ஆனால் அவருடைய ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறார். பாருங்கள்? அது நாமல்ல, ஏனென்றால் எனக்காக நான்... இப்போது இங்கே ஒரு பெண் இருக்கிறார். (இவர்தானா ஜெபிக்கப்பட வேண்டிய பெண்? சரி.) 217 இப்போது, எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியாது, என் வாழ்வில் அவளை நான் பார்த்ததே இல்லை. நாங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது என்று சில நிமிடங்களுக்கு முன்பு அவள் தன் கையை உயர்த்தினாள். இதோ என் கை, வேதாகமம் இங்கே திறக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது, எனக்கு அவளைத் தெரியாது, நான் அவளைப் பார்த்ததே இல்லை. உங்களுக்கு என்னைத் தெரியாது, நாம் இங்கே இருக்கிறோம், ஒரு அறிமுகமில்லாதவர். இப்போது, இப்போது, இங்கே யோவான் 4-ம் அதிகாரத்தின் மிக அழகான ஒரு சித்திரம் இருக்கிறது, சமாரியாவில் உள்ள பொதுக் கிணற்றருகே இருந்ததைப் போல ஒரு பரந்த காட்சி இங்கே இருக்கிறது. 218 இப்போது, இங்குள்ள ஒவ்வொரு நபரும் அதை ஏற்றுக்கொள்ள இப்போது தயாராக இருங்கள், பாருங்கள், இது-இது இங்கேயே அதைத் தீர்த்துவிடும். நீங்கள் தயாராக இருங்கள்; நீங்கள் தயாராக இருங்கள்; நீங்கள், நீங்கள், இங்கிருக்கும் அனைவரும், தயாராக இருங்கள். பாருங்கள்? ஏனென்றால், அவர் உள்ளே வருவதையும், அப்படியே செய்வதையும் உங்களால் காண முடிந்தால், அவர் மரித்துப்போகவில்லை என்பதையும், அவர் தமது வார்த்தையைக் கண்காணித்துக் கொண்டு இங்கே உயிருடன் இருக்கிறார் என்பதையும் அது காட்டுகிறது. உங்கள் சிறிய படகு அங்கும் இங்கும் அலைக் கழிக்கப்படுகிறது. பாருங்கள்? அப்படியானால் விசுவாசியுங்கள். 219 அதை ஏற்றுக்கொள்ளுங்கள், பயப்பட வேண்டாம், "நான்தான்; பயப்படாதிருங்கள்" என்று அவர் சொன்னார். இப்போது, அதை நினைவில் வையுங்கள்: "பயப்படாதிருங்கள்; நான்தான்." அவருடைய வார்த்தையை அப்படியே நம்புவதற்குப் பயப்பட வேண்டாம். "ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். நான் குணமடைவேன்" என்று சொல்லுங்கள். அதை மட்டும் செய்யுங்கள். "பயப்படா திருங்கள்; நான்தான்." 220 இப்போது கேளுங்கள், இந்தப் பெண்ணும் நானும் முற்றிலும் அறிமுக மில்லாதவர்களாக இருந்தால், ஒருவரை யொருவர் பார்த்ததே இல்லை என்றால், நான் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டு, கிணற்றருகே இருந்த பெண்ணிடம் இயேசு செய்தது போல, அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றைக் கூறினால், அது அவளுடைய வாழ்க்கையில் உள்ள எதுவாக இருந்தாலும், நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததே இல்லை, அது ஏதோ ஒரு ஆவிக்குரிய வல்லமையின் மூலமாகத்தான் வர வேண்டும். அது சரிதானே? அது நமக்குத் தெரியும். அது ஒரு அற்புதமாக இருக்கும். அது எத்தனை பேருக்குத் தெரியும்? அற்புதம் என்பது, விளக்க முடியாத ஒன்று. சரி. அப்படியானால் அது நடந்தால், அது கிறிஸ்துதான், பரிசுத்த ஆவியானவர்தான், அப்போதிருந்த அதே போலத்தான் என்று உங்களில் எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள்? சரி, அப்படியானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவளும் நானும், எங்களது வாழ்நாளில் ஒருவரையொருவர் பார்த்ததே இல்லை. 221 இப்போது, தேவனுடைய மகிமைக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியையும் தேவனுடைய மகிமைக்காக என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறேன். இப்போது பயபக்தியுடன் இருங்கள், ஜெபத்தில் இருங்கள். (அமைதியாக, ஆர்கன் இசையோடு.) 222 இப்போது, அம்மா, இயேசு அந்தப் பெண்ணிடம் பேசியது போலவே நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். இப்போது, நீங்கள் வியாதிக்காக இங்கே இருக்கலாம், வேறு ஒருவருக்காக நீங்கள் இங்கே இருக்கலாம், நீங்கள், எனக்குத் தெரியாது, பாருங்கள், அது நிதி சம்பந்தமானதாக இருக்கலாம். நான்-நான்... நீங்கள் இங்கே நிற்கும் ஒரு பெண், அவ்வளவுதான். அதே வழியில்தான் அந்தப் பெண் நம்முடைய ஆண்டவரைச் சந்தித்தாள். 223 இப்போது, அவர் அவளுடன் சிறிது நேரம் பேசினார். இப்போது, நீங்கள் என் வார்த்தையை இதற்காக நம்ப வேண்டும், இதை என்னால் வேதத்திலிருந்து நிரூபிக்க முடியாது. ஆனால் அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியதாயிருந்தது, பிதா தமக்குக் காண்பித்தாலொழியத் தாம் எதையும் செய்யவில்லை என்று அவர் சொன்னார், எனவே இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவர், பிதா அவரைச் சமாரியாவுக்கு அனுப்பினார். சரி, அவருக்குத் தெரிந்த ஒரே காரியம், செய்ய வேண்டியது, சமாரியாவுக்குச் செல்வதுதான். அவர் தனித்திருக்கலாம் என்று நினைத்தார், எனவே அவர் சீஷர்களை அனுப்பிவிட்டார். அவர் காத்திருந்தார், ஒரு பெண் வந்தாள், எனவே அது அந்தப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். எனவே அவர் அங்கே அமர்ந்து, அவளுடன் பேச ஆரம்பித்தார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியைத் தொடர்புகொண்டிருந்தார். 224 இப்போது, அவர் அங்கே கீழே சென்று, "நான்தான் மேசியா, நான்-நான்தான் மேசியா" என்று சொல்லியிருந்தால், அதை அவள் சொல்வது சிறப்பாக இருந்திருக்கும். பாருங்கள்? இந்தப் பெண்ணிடம் அவர் தம்மை வெளிப்படுத்தட்டும். பாருங்கள்? தேவன் மர்மமான வழிகளில் செயல்படுகிறார். பாருங்கள்? அவளுடைய வாழ்க்கையில் இருந்த ஏதோ ஒன்றைக் குறித்து அவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார். நல்லது, அவள் சொன்னாள், "நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். மேசியா வரும்போது, அவர் இதை நமக்குச் சொல்வார் என்று எனக்குத் தெரியும், அவர் இந்தக் காரியங்களைச் செய்வார் என்று அவர் சொன்னார்." இயேசு, "நானே அவர்" என்று சொன்னார். இப்போது, அதே கிரியைகளை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அதுவும் குறிப்பாக இந்தக் காலத்தில். 225 இப்போது, நீங்கள் வியாதியுடன் இருந்து, "என்னிடம் தெய்வீக சுகமளிக்கும் வரம் இருக்கிறது" என்று நான் சொன்னால், தெய்வீக சுகமளிக்கும் வரம் என்பது தெய்வீக சுகமளிப்பில் உள்ள விசுவாசத்தைத் தவிர வேறொன்றுமில்லை, அது அவ்வளவுதான், விசுவாசம் வையுங்கள். தெய்வீக சுகமளிப்பில் விசுவாசம் உள்ள ஒவ்வொருவருக்கும் தெய்வீக சுகமளிக்கும் வரம் இருக்கிறது, ஏனென்றால் அது அவ்வளவுதான். 226 இப்போது, இரட்சிப்பை விசுவாசிக்கிற ஒரு மனிதனை அது ஒரு-ஒரு தெய்வீக இரட்சகராக மாற்றாததைப் போலவே, அது அவர்களை ஒரு தெய்வீகக் குணமாக்குபவராக மாற்றுவதில்லை. பாருங்கள்? அவர் அதில் விசுவாசம் வைக்கிறார், அவ்வளவுதான். நானும் அதை விசுவாசிக்கிறேன், ஆனால் ஜாக் கோ மற்றும் பல சகோதரர்களைப் போல, உண்மையாகவே... அந்த மனிதர்களில் சிலரைப் போல நான் வரம் பெற்ற ஒருவன் அல்ல. அவர்கள், தேவன் அவர்களுடன் அவர்களின் வழிகளிலும், சகோதரர் ராபர்ட்ஸுடன் அவரது வழிகளிலும், என்னுடன் என் வழியிலும் இடைபடுகிறார் என்று நான் நினைக்கிறேன்; எங்களுக்கு ஊழியங்கள் இருக்கின்றன, அவ்வளவுதான். 227 சபையிலே தேவன் அப்போஸ் தலராகவும், தீர்க்கதரிசிகளாகவும், போதக ராகவும், சுவிசேஷகராகவும், மேய்ப்பராகவும் சிலரை ஏற்படுத்தினார். அவ்வளவுதான். பின்பு சபையில் ஒன்பது ஆவிக்குரிய வரங்கள். 228 இப்போது, நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரர் பிரான்ஹம், நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்?" நான் உங்கள் ஆவியைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன். இயேசு என்னை இந்த நகரத்திற்கு அனுப்பினார், நான் இங்கே வழிநடத்தப்பட்டேன். இப்போது, இதோ ஒரு பெண், அவளுடைய ஜெப அட்டையில் உள்ள ஒரு எண்ணின் மூலமாக, அங்கே... நான் எங்கே கூப்பிட்டேன் என்று மறந்துவிட்டேன், ஐம்பது அல்லது எழுபத்தைந்து அல்லது அதுபோல எங்கோ ஒன்று, இப்போது அது எங்கே இருந்தது என்று மறந்துவிட்டேன், அந்தப் பெண்ணாக நீங்கள் அங்கே நிற்கிறீர்கள். சரி. இப்போது, ஒருவரையொருவர் அறியாமல், இப்போது, நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன்? உங்கள் ஆவியைத் தொடர்புகொள்ள. 229 மேலும் கர்த்தராகிய தேவன்... என்னிடம் குணமாக்கும் வரம் இருக்கிறது என்று சொல்லி, என் கைகளை உங்கள் மீது வைத்து, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா! நீங்கள் குணமடையப் போகிறீர்கள்" என்று சொன்னால். அது சரியாக இருக்கும். போய் அதை விசுவாசியுங்கள், நீங்கள் குணமடைவீர்கள், நான் அதை விசுவாசிக்கிறேன், தேவன் உங்கள் விசுவாசத்தைக் கனப்படுத்துவார். 230 ஆனால் அவர் வந்து நீங்கள்-நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று ஏதோ ஒன்றை உங்களிடம் சொல்லி, பின்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும். அது, கடந்த காலத்தைப் பற்றியது, உண்மையா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும், உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த ஒன்று, வெகு காலத்திற்கு முன்பு, அல்லது-அல்லது அவர் எதைச் செய்தாலும், அல்லது அந்த வரிசையில் உள்ள ஒன்றைச் சொன்னால், அது அதே மேசியாவாக அவரை ஆக்கும். கூட்டத்தினர் அதைத் தவறாக எண்ண மாட்டார்கள், அவர்கள் விசுவாசித்து, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இப்போது, அவர் அதை அருளுவாராக. 231 இப்போது, கூட்டத்தினரால் இன்னும் என் குரலைக் கேட்க முடிந்தால், அந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த அக்கினி ஸ்தம்பம் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே சரியாக நிற்கிறது. நான் அவளைப் பார்க்கிறேன், அவள் விலகிச் செல்கிறாள், அவள் நேரில் இருப்பதை விட பல ஆண்டுகள் இளையவளாகத் தோன்றுகிறாள், எனக்கு நெருக்கமாக நிற்கிறாள். அவள் பின்னோக்கி நகர்ந்து... அவளுக்கு ஒரு வகையான அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அது அவளுடைய தொண்டையில், அது ஒரு தொண்டைக்கழலை (goiter). அது சரிதான். அது-அது சரி என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். 232 சரி, இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நாம் அந்தப் பெண்ணிடம் இன்னும் சற்று நேரம் பேசுவோம், பாருங்கள், இன்னும் சற்று நேரம், பாருங்கள். அப்பொழுது நீங்கள்... நீங்கள் அதை ஊகித்துவிட்டீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர் வேறு என்ன சொல்வார் என்று பாருங்கள். 233 ஆம், நான் அவளை இப்போது மீண்டும் பார்க்கிறேன், அது தொண்டையில் நடந்த ஒரு அறுவை சிகிச்சை. அது நடந்து நீண்ட காலமாகிவிட்டது, அந்தப் பிரச்சனை மீண்டும் வந்திருக்கிறது, அது உங்களுக்கு மீண்டும் வந்திருக்கிறது. அது உண்மை. ஆனால் பாருங்கள், அது மருத்துவரிடமிருந்து மறைந்திருக்கிறது, ஆனால் அது தேவனிட மிருந்து மறைய முடியாது, அது எங்கே இருக்கிறது என்று தேவனுக்குச் சரியாகத் தெரியும். அது ஒரு உயிர், உங்கள் தாயின் கருப்பையில் ஒரு சிறு குழந்தையாக நீங்கள் வளர்ந்தது போலவே, இது மூச்சுத்திணறச் செய்யும் செல்கள் பலுகிப் பெருகும் ஒரு வளர்ச்சி, ஆனால் இதற்கு எந்த உருவமும் இல்லை, அது வெறுமனே பரவுகிறது, அது ஒரு பிசாசு, மூச்சுத்திணறச் செய்யும் ஆவி. அது உண்மை. 234 நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக: அங்கே சரியாக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள், அவளுக்கும் தொண்டை பிரச்சனைதான். அது உண்மை. நீங்கள் எதைத் தொட்டீர்கள்? எனக்கு உங்களைத் தெரியாது, அப்படித்தானே? என் வாழ்வில் உங்களைப் பார்த்ததே இல்லை, ஆனால் அதனால்தான் நீங்கள் அவதிப் படுகிறீர்கள். பாருங்கள், ஒரு ஆவி உதவிக்காக மற்றொன்றை அப்படி அழைப்பதை என்னால் உணர முடிகிறது, பாருங்கள், அப்படி, அது குறுக்கிட்டிருக்கிறது, பாருங்கள். நீங்கள் யார் என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் சொன்னால், அது உங்களுக்கு உதவுமா? அது கூட்டத்தினருக்கு உதவுமா? திருமதி. ஹாரிசன், நீங்கள் வீட்டிற்குப் போகலாம், நலமாக இருங்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கிறது. 235 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறாரா? இப்போது, இங்கே ஒரு பெண் ஜெப அட்டையுடன் நின்றுகொண்டிருந்தாள், அங்கே கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண், பாருங்கள். இப்போது, அதைச் செய்வது எனக்கு முற்றிலும் சாத்தியமற்றது. 236 நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரர் பிரான்ஹம், என்னிடம் சொல்லுங்கள்." என்னால் அதைச் செய்ய முடியாது, எனக்குத் தெரியாது. நீங்கள் அவரைத் தொட்டுப் பாருங்கள். 237 அங்கே அமர்ந்திருந்த அந்தப் பெண் ஜெபித்துக்கொண்டிருந்தாள், அந்த ஆவி... நீங்கள் ஜெபிக்க ஆரம்பித்து, என்ன நடக்கிறது என்று பாருங்கள். நீங்கள் அதை நம்புங்கள், அதைச் சந்தேகிக்க வேண்டாம், உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்து என்ன நடக்கிறது என்று பாருங்கள், வெறுமனே விசுவாசம் வையுங்கள். 238 நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லா தவர்கள், நாம் ஒருவேளை பல ஆண்டுகள் இடைவெளியில் பிறந்திருக்கலாம், ஆனால் கர்த்தராகிய தேவன் உங்கள் இருதயத்தில் உள்ள ஏதோ ஒன்றை எனக்கு வெளிப்படுத்தினால், அது-அது அவருடைய வார்த்தை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், இன்றிரவு நான் பிரசங்கித்த இந்தச் செய்தி, அது அவருடைய வார்த்தை... மேலும் அது என் இருதயத்தில் வாசம் செய்தால், தேவனுடைய வார்த்தை யானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. அது சரிதானே? தேவனுடைய குமாரனில் அது மாம்சமானபோது எப்படி இருந்ததோ, அதே போலத்தான் அது இன்று சபையாகிய நமது மாம்சத்திலும் இருக்கிறது. 239 எனவே இதை என்னால் சுயமாகச் செய்ய முடியாது, அதைச் செய்ய நீங்களும் தேவை, அங்கே அவர்களும் தேவை. இதே அபிஷேகத்தைப் பெற்றிருக்க அங்கே வேறு யாராவது தேவைப்படுகிறார்கள். பாருங்கள்? இல்லாமல் இருக்கலாம்... அது வேலை செய்யும், ஆனால் ஒருவேளை அவர்களால்-அவர்களால் அதைச் சொல்ல முடியாமல் போகலாம், ஏனென்றால் இது ஒரு வரம். பாருங்கள்? நான் பிறந்தபோது, கிருபை வரங்களும் அழைப்பும் மாறாதவைகளாமே, நான் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோதே அதே காரியம்தான் நிகழ்ந்தது, என் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக, மாறாதவைகளாக இருக்கிறது. 240 ஏதோ ஒன்றைப் பற்றி நீங்கள் மருத்துவரை அணுகிக் கொண்டிருப்பதால் நீங்கள் வியாதியாக இருக்கிறீர்கள். சரி. அது-அதுவும் ஒரு தொண்டை பிரச்சனைதான். அது உண்மை. இப்போது, இதோ அதன் பகுப்பாய்வு, நீங்களே தீர்மானியுங்கள்: அது குரல்வளையில் இருக்கிறது, அது குரல்வளைக்குள் இருக்கும் ஒரு புண். அது இருந்தது, இப்போது இல்லை, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது...?... வெறுமனே விசுவாசம் வையுங்கள். 241 அம்மா, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள், எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக, அல்லது, அவருடைய ஊழியக்காரனாக நம்புவீர்களா? நம்புவீர்களா? இது ஒரு குடலிறக்கம் (hernia). உங்களுக்குச் சில தொந்தரவுகள் இருந்தன, இல்லையா, ஆனால் அறுவை சிகிச்சை நிபுணரின் அறுவை சிகிச்சையானது வாழ்க்கையில் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது, புற்றுநோய். இப்போது அது குடலிறக்கமாக வந்திருக்கிறது. அது உண்மைதான். அவர் உங்களைக் குணமாக்கினார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் செல்லுங்கள், தேவன் உங்களைக் குணமாக்குவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 242 விசுவாசம் வையுங்கள். நீங்கள் நம்புகிறீர்களா? அங்கு பார்வையாளர்களாக இருப்பவர்களே, மிகவும் பயபக்தியாக இருங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான்-நான் உங்கள் சகோதரனாக, இதுதான் சத்தியம் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம்பும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஜெபம் செய்யுங்கள், "ஆண்டவரே, நான் உம்மைத் தொட என்னை அனுமதியும்" என்று சொல்லுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான்-நான் நம்புகிறேன்... 243 இப்போது, அவைகள் என்னை மிகவும் பலவீனமாக்குகிறது, மிகவும் பலவீனமாக் குகிறது. எத்தனை பேரால் அதைப் புரிந்து கொள்ள முடியும்? நிச்சயம். தேவனுடைய குமாரனை ஒரு நபர் மட்டும் தொட்டபோது, தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டுப் போனது என்று அவர் சொன்னார் என்றால், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவியாகிய என் நிலை என்ன? ஆனால் அவர் இங்கே இருக்கிறார் என்பதை அது அறிவிக்கிறது, அது அவருடைய பிரசன்னத்தை அறிவிக்கிறது, அவர் இங்கே இருக்கிறார். இங்கெல்லாம் எழுந்து நிற்கிற நீங்களும் அதை நம்புகிறீர்களா? நீங்கள் அதை நம்புகிறீர்களா? வெறும்-வெறும் விசுவாசம் வைத்து அதை நம்புங்கள். 244 ஒரு நிமிடம். (இப்போது, இவற்றில் மூன்றை நான் முடிக்கும்போது, எனக்குத் தெரியப்படுத்துங்கள், ஏனெனில், எனக்கு அடுத்தடுத்து கூட்டங்கள் வரவிருக்கின்றன.) நான்-நான் உங்களுக்கு ஒரு அறிமுகமில் லாதவன், எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறீர்களா? நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கும் போது, நம்முடைய ஆண்டவர் இங்கே சரீர ரூபத்தில் இருந்தால்... அவர் இங்கே ஆவிக்குரிய பிரகாரமாக இருக்கிறார், ஏனென்றால் ஒரு புறாவைப்போல அவர்மேல் இறங்கின அதே பரிசுத்த ஆவியானவர், இப்போது நம்மேல் அக்கினியைப் போல இறங்கி வருகிறார். 245 நீங்கள் ஒரு விசுவாசி, நான் ஒரு வழிப்போக்கனை (hitchhiker) குறிப்பிட வில்லை, நான் ஒரு-ஒரு விசுவாசியைக் குறிப்பிடுகிறேன். அது சரிதான். அப்படியானால் நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறீர்களா? நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை தேவனுடைய ஆவியானவரால் என்னால் உங்களுக்குச் சொல்ல முடிந்தால், நீங்கள் என்னை நம்புவீர்களா? சைனசிடிஸ் (Sinuitis). ஓ, அது ஒரு பயங்கரமான விஷயம்! அது சரிதான். அது சரியாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரிதான். ஆனால் அது மட்டும் உங்கள் இருதயத்தில் இல்லை. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற வேறு ஏதோவொன்றும் உங்கள் இருதயத்தில் இருக்கிறது. அவருக்குக் காலில் ஒரு புண் இருக்கிறது. உங்கள் கண்ணீரைத் துடைக்கிற அந்த கைக்குட்டையை எடுத்து அந்தப் புண்ணின் மேல் வையுங்கள். அது அவரை விட்டு நீங்கும். இப்போது விசுவாசித்துச் செல்லுங்கள். 246 ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். நான் இதற்கு முன்பு உங்களைப் பார்த்ததில்லை, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பினவரும், உன்னதத்திற்கு ஏறி மனுஷர்களுக்கு வரங்களை அளித்து, சபையிலே அப்போஸ்தலர்களை, அதற்கர்த்தம் "மிஷனரி," தீர்க்கதரிசிகளை, அதற்கர்த்தம் "தீர்க்கதரிசி (seer)," மேய்ப்பர்களை, சுவிசேஷகர்களை மற்றும் பலரை ஏற்படுத்தி னவருமான பரலோகத்தின் தேவன், இன்னமும் தேவனாகவே இருக்கிறார். உங்களுடைய பிரச்சனை என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக, அல்லது, அவருடைய ஊழியக்காரனாக ஏற்றுக் கொள்வீர்களா? அப்படிச் செய்வீர்களா? நல்லது, ஐயா. 247 பார்வையாளர்களும் அதே காரியத்தைச் செய்வார்களா? (இது இன்னமும் மூன்றாவதா, அல்லது...? அது வெறும், சரி, வெறும், இங்கு ஒருவரை நாம் பெற்றிருக்கிறோம்.) அந்த மனிதரைப் பற்றி ஏதோ ஒரு வினோதமான காரியம் இருக்கிறது, என்னால் இன்னமும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, நான் அவரோடு பேசும்போது பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தட்டும். நீங்கள் கேட்கும் அளவுக்கு என் குரல் சத்தமாக இருக்கிறது என்று நம்புகிறேன். 248 அது தாண்டிப் போகிறது... இப்போது, இப்போது அது இந்த மனிதரிடம் வருகிறது. இந்த மனிதர் ஒரு பயங்கரமான நிலைமையில் இருக்கிறார், அவர் மரணத்தின் வேளையில் இருக்கிறார், அநேகமாக. அவர் ஒரு புற்றுநோயினால் மரண இருளினால் சூழப் பட்டிருக்கிறார், அந்தப் புற்றுநோய் அவருடைய தொண்டையில் இருக்கிறது. அது சரிதான். சிகரெட் பிடிப்பது தொண்டைக்குக் கெடுதி என்பது உங்களுக்குத் தெரியும். அதை விட்டுவிடுவீர்களா? அதைக் கிழித்துப் போடுவீர்களா? 249 மற்றொரு காரியம், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல, நீங்கள் ஒரு பாவி. உங்கள் ஆத்துமாவுக்காக, அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? தேவன் எதன் மூலமாக...? அப்போஸ்தலனாகிய பேதுரு வந்தார், அவரும் ஒரு பாவியாகவே இருந்தார். அப்போஸ்தலனாகிய பேதுருவுக்குச் செய்தது போல, தேவன் உங்களுடைய பெயரை எனக்கு வெளிப்படுத்தி, உங்களுடைய பெயரை எனக்குச் சொன்னால், அது உங்களை நேசிக்கிற, இப்போதே உங்களை எதிலிருந்தோ காப்பாற்றுகிற கிறிஸ்துதான், தேவன்தான் என்று நீங்கள் நம்புவீர்களா? உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற என் வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்வீர்களா? திரு. டேவிட்சன், அப்படியானால் நீங்கள் வீட்டிற்குச் சென்று, குணமடையுங்கள். தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். அங்கிருந்து எங்கிருந்தோ ஏதோ ஒன்று வருவதை நான் தொடர்ந்து உணருகிறேன், நான் அவர்களின் மனதை வாசிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், நான் அப்படிச் செய்யவில்லை. 250 இங்கே, என் கையை மட்டும் தொடவும், அம்மா. நான் இந்த பக்கம் பார்த்து உங்கள் பிரச்சனை என்ன என்று நான் உங்களுக்குச் சொன்னால், அது சரியா இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். அது சரிதானே? அப்படியானால் நீங்கள் அதை நம்பினால் உங்கள் புற்றுநோய் உங்களை விட்டு நீங்கும். நீங்கள் அதை நம்புவீர்களா? அப்படியானால் உங்கள் கையை உயர்த்துங்கள். நல்லது, அப்படியானால் செல்லுங்கள், விசுவாசம் வையுங்கள். 251 வாருங்கள், அம்மா. நீங்கள் நம்புவீர்களா, அம்மா? நான் இந்தப் பக்கம் பார்க்கும்போது, தேவன் உங்கள் பிரச்சனை என்ன என்பதை எனக்கு வெளிப்படுத்துவார் என்று, என்னை அவருடைய தீர்க்கதரிசியாக, அல்லது, அவருடைய ஊழியக்காரனாக நம்புவீர்களா? [அந்தச் சகோதரி, "நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று நான் நம்புகிறேன்" என்கிறார்] அவருடைய... ஆக இருக்கிறீர்கள் என்று நம்புகிறீர்கள்... நன்றி, சகோதரி. அப்படியானால் சென்று உங்கள் இரவு உணவைச் சாப்பிடுங்கள், அந்த வயிற்றுப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கிவிட்டது. அந்தப் பெண் வருவதற்கு முன்பே நான் உங்களிடம் சொன்னால்? அவளுக்கும் அதே பிரச்சனைதான் இருந்தது, ஒரு நரம்பு சம்பந்தமான வயிற்றுப் பிரச்சனை, அது உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்தது, போய்ச் சாப்பிடுங்கள். விசுவாசம் வையுங்கள். அங்கே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு, உங்களின் முதுகுப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கிவிட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களா? நல்லது, அப்படியானால் செல்லுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பார்வையாளர்களே, சந்தேகப்பட வேண்டாம், வெறும்... வாருங்கள், அம்மா. இருதயப் பிரச்சனை, தேவன் அவளுடைய இருதயப் பிரச்சனையைக் குணமாக்க முடியும். செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவன் மூட்டுவலியையும் (arthritis) குணமாக்குகிறார். அது உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் சென்று விசுவாசியுங்கள். வாருங்கள். தேவன் உங்கள் ஆஸ்துமாவைக் குணமாக்கி உங்களைச் சொஸ்தமாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவனுக்கு நன்றி செலுத்தி, மகிழ்ச்சியோடு செல்லுங்கள். தேவன் உங்கள் நீரிழிவு நோயைக் குணமாக்கி, உங்களைச் சொஸ்தமாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? முன்னேறிச் செல்லுங்கள், செல்லுங்கள். அந்த மற்றொரு பெண்ணுக்கு ஆஸ்துமா குணமாக்கப்பட்டது என்றால், உங்களைப் போன்ற ஒரு இளம் பெண்ணுக்கு அது குணமாக்கப்பட முடியும்தானே, இல்லையா? உ-ஹூம். சந்தேகப்பட வேண்டாம், விசுவாசம் வையுங்கள். நீங்கள் நம்புகிறீர்களா? முழு பார்வை யாளர்களும் எனக்குப் பால் போன்று (milky-like) மங்கலாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். 252 அங்கே என்னைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற மூட்டுவலியுடன் இருக்கும் அந்த மனிதரே, சில நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பெண் விசுவாசித்தபோது நான் அதைப் பிடித்துக்கொண்டேன், உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கிறது, முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அந்த நீரிழிவு நோயைக் குணமாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்பே எழுந்திருக்கத் தொடங்கினீர்கள், நான் அப்போதே உங்களிடம் சொல்லியிருக்க முடியும். கவலைப்பட வேண்டாம், அது முடிந்துவிட்டது. 253 அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற உங்களைப் பற்றி என்ன, அது உங்களையும் ஆசீர்வதிக்குமா? அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மனிதரே, தேவன் அந்த உயர் இரத்த அழுத்தத்தைக் குணமாக்கி, உங்களைச் சொஸ்தமாக்குவார் என்று நம்புகிறீர்களா? நல்லது. அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நீரிழிவு நோய் இருந்தது. அவர் உங்களைச் சொஸ்தமாக்குவார் என்று நம்புகிறீர்களா? அங்கே கடைசியில் உட்கார்ந்திருக்கும் உங்களைப் பற்றி என்ன, உங்கள் மேல் கைகளை வைத்தால், நீங்கள் குணமடைவீர்கள் என்று நம்புகிறீர்களா? இங்கே வாருங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், சென்று குணமடையுங்கள். 254 நீங்கள் உங்களை நிதானப் படுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள், எப்படி இருந்தாலும் எல்லோரும் உங்களிடம் அதைத்தான் சொல்கிறார்கள், ஆனால் நரம்புத்தளர்ச்சி (nervousness) ஒரு பயங்கரமான விஷயம். நீங்கள் கால் வைக்க ஒரு இடத்தை விரும்பினீர்கள், அப்போது நீங்கள் அங்கிருந்தே தொடங்க முடியும். அது சரிதானே? நீங்கள் இப்போது அந்த இடத்தில்தான் இருக்கிறீர்கள், உங்கள் நரம்புத்தளர்ச்சி போய்விட்டது. செல்லுங்கள், விசுவாசியுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அங்கே இருக்கும் உங்களில் சிலர் ஜெபம் செய்யுங்கள், விசுவாசியுங்கள். 255 இங்கே, எனக்கு முன்பாக ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறார், அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் தனக்காக ஜெபிக்கவில்லை, அவர் தன் தாய்க்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார், மனநலக் காப்பகத்தில் இருக்கும் ஒரு தாய்க்காக. நான் உங்களைத்தான் பார்த்துப் பேசுகிறேனா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டீர்கள், இல்லையா? நான் தொடர்புகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். இப்போது, நீங்கள் உங்கள் தாய்க்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள். இங்கே உட்கார்ந்திருக்கும் அந்தப் பெண். நிச்சயம். 256 அதை நம்பும்படி நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அதை நம்பும்படி நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். நீங்கள் அதை நம்புகிறீர்களா? 257 இங்கே இருக்கும் எத்தனை பேர்...? இயேசுவை உங்கள் இரட்சகராக அறியாத எத்தனை பேர் இங்கு இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் இப்போதே, அவரை உங்கள் இரட்சகராக அறிய விரும்புகிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் அவரை உங்கள் இரட்சகராக அறிய விரும்புகிறீர்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். அவரை இரட்சகராக அறிய விரும்புகிற நீங்கள், இப்போதே, அவர் இங்கு பிரசன்னமாக இருக்கும்போதே அவரை ஏற்றுக்கொண்டு, கட்டிடத்தில் எங்கும் உள்ளவர்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். 258 அவர் இங்கே பிரசன்னமாக இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? நான் இந்தப் பலிபீடத்தை விட்டுப் புறப்பட முயற்சிக்கிறேன். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, உங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னிக்க இங்கிருக்கிறார், நீங்கள் உணருவதை வைத்து அல்ல, ஆனால் அவர் உங்களுக்காக மரித்தார் என்ற அடிப்படையின் மீது நீங்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்களா, மேலும் நீங்கள் இப்போது அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், அவர் உங்களுக்காக மரித்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள், மேலும் அவர் உங்கள் இரட்சகராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அந்த அடிப்படையில் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் கைகளை அவரை நோக்கி உயர்த்துங்கள். 259 பரம பிதாவே, "என் பிதா ஒருவனை முதலாவது இழுத்துக்கொள்ளாவிட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்" என்று நீர் வேதத்தில் சொல்லியிருக்கிறீர். மேலும் இந்த மக்கள் தாங்கள் தவறு செய்தவர்கள் என்பதைத் தங்கள் ஆவிகளில் அறிந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் உம்மைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், பிதாவே, அவர்கள் உம்மை ஏற்றுக்கொண்டதை, இப்போதே, நீர் அவர்களுக்கு அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 260 "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று நீர் சொன்னீர். பரிசுத்த யோவான் 5:24-ல், "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்" என்று நீர் சொல்லியிருக்கிறீர். அவர்கள் உம்முடையவர்கள், பிதாவே, அவர்கள் இந்தக் கூட்டத்தின் அடையாளங்களாக இருக்கிறார்கள். 261 நம்முடைய தலைகள் தாழ்த்தப் பட்டிருக்க, தேவன் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் இங்கே நடந்து வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கைகளை உயர்த்திய நீங்கள் அங்கிருக்கும் வரிசைகளிலிருந்து நேராக வெளியே வாருங்கள். நேராக இங்கே வந்து ஒரு நிமிடம் இங்கே நில்லுங்கள், பலிபீடத்தைச் சுற்றி, நேராக இந்தப் பக்கமாக ஒரு நிமிடம் நகர்ந்து வாருங்கள். இப்போதே கிறிஸ்துவை விரும்பும் ஒவ்வொருவரும், நேராகக் கீழே இங்கே வாருங்கள், அப்படியே இங்கே வாருங்கள். அங்கே, உமது இரத்தம் சிந்தப்பட்டதற்காக... மேலும் நீர் என்னிடம் வரச் சொன்னதற்காக, ஓ தேவ ஆட்டுக்குட்டியானவரே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்! 262 கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக அறியாத ஒவ்வொரு சபை உறுப்பினரும், அவரை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள், நீங்கள் அதைப் பார்க்கும்போது, நீங்கள் இங்கே, பிரசன்னமாக இருக்கும்போது, இப்போதே நீங்கள் ஏன் அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும்? தேவன் என் ஜெபத்தைக் கேட்டு, குருடர்களின் கண்களைத் திறந்து, முடவர்களை நடக்கச் செய்கிறார் என்றால், அவர்-அவர் உங்கள் பாவத்தையும் மன்னிப்பார். 263 அவர் உங்கள் இருதயத்தை அறிந்து, அங்கே என்ன இருக்கிறது என்பதை மேடையில் உங்களுக்குச் சொல்கிறார் என்றால், அங்கே வெளியே, இன்னமும் அநேகர் வர வேண்டும் என்று அவர் என்னிடம் சொல்கிறார். அவர் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார், நான் உங்களை அழைக்கத் தேவையில்லை, ஏனென்றால் என்னால் இங்கு நிற்க முடியாத அளவிற்கு நான் மிகவும் பலவீனமாகி வருகிறேன். சீக்கிரமாக வாருங்கள், வருவீர்களா? ஆகையால் நான் இனி காத்திருக்க வேண்டியதில்லை. வாருங்கள், இப்போதே. நான் இருக்கிறபடியே, மேலும் காத்திருக்காமல் என் ஆத்துமாவை ஒரு இருண்ட கறையிலிருந்து நீக்க, ஒவ்வொரு கறையையும் சுத்திகரிக்கக் கூடிய இரத்தத்தை உடைய உம்மண்டை, ஓ தேவ ஆட்டுக்குட்டியானவரே, (நல்லது, இப்போது.) ...வருகிறேன்! நான் வருகிறேன்! நான் இருக்கிறபடியே, நீர் ஏற்றுக்கொள்வீர், வரவேற்று, மன்னித்து, சுத்திகரித்து, ஏற்றுக்கொள்வீர்; நான் விசுவாசிக்கிறேன் என்று வாக்குறுதி அளிப்பதால், ஓ ஆட்டுக்குட்டியானவரே... வாருங்கள், என் சகோதரனே. வாருங்கள், என் சகோதரியே. ...நான் வருகிறேன்! நான் வருகிறேன்! நான் இருக்கிறபடியே, நீர் ஏற்றுக்கொள்வீர், வரவேற்பீர்... 264 வாருங்கள், ஒவ்வொருவரும், இப்போது வாருங்கள். காத்திருக்க வேண்டாம், உங்களுக்கு மிகவும் உறுதியாகத் தெரியவில்லை என்றால், இப்போது வாருங்கள். அவர் நேராக இங்கே மேடையில் இருக்கிறார். தேவனுக்கு முன்பாக, நான் சத்தியத்தைச் சொல்கிறேன், அந்த அக்கினி ஸ்தம்பம், ஒவ்வொரு மனிதனின் இருதயத் தையும் அறிந்திருக்கிற தேவனுடைய தூதனானவர், இப்போதே நேராக இங்கே இருக்கிறார். ...தேவ ஆட்டுக்குட்டியானவரே... 265 அவர் வருவதை நீங்கள் காணும் வரை நீங்கள் ஒருபோதும் இதற்கு மேல் நெருக்கமாக இருக்க மாட்டீர்கள். ...நான்... 266 உங்கள் இருதயத்தில் ஏதேனும் கேள்வி இருந்தால், இப்போது வாருங்கள். ...நான் இருக்கிறபடியே, காத்திருக்காமல் என் ஆத்துமாவை ஒரு இருண்ட கறையிலிருந்து நீக்க, உம்மண்டை, யாருடைய இரத்தம் சுத்திகரிக்க முடியுமோ... (நீங்கள்-நீங்கள் எங்களுக்காக வந்து ஜெபிப்பீர்களா?) ஓ ஆட்டுக்குட்டியானவரே... ...ஏற்றுக்கொள்வீர், வரவேற்பீர்... வாருங்கள், சிறு பெண்ணே...?... பயப்படாதிருங்கள் (61-0224) 2